ஆப்பிள் ஐபோன் 17ஐ துபாய் போய் வாங்கினால்.. விமான டிக்கெட் சேர்த்தும் பல ஆயிரம் மிச்சமாகும் தெரியுமா!
சென்னை: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 ஒருவழியாக வெளியாகிவிட்டது. அது சீக்கிரமே விற்பனைக்கு வரும் நிலையில், அதை வாங்கப் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் ஐபோனை வாங்குவதற்குப் பதிலாக நீங்கள் துபாய் சென்று வாங்கினால் உங்கள் கணிசமான பணத்தைச் சேமிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் ஐபோன் 17 அடிப்படை மாடலின் விலை ₹82,900ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபோன் ஏர், ₹1,19,000க்குக் கிடைக்கும் நிலையில், ஐபோன் 17 ப்ரோ ₹1,34,900க்கும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ₹1,49,900க்கும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஐபோன் விலை அதிகமாக இருக்கும்.

விலை அதிகம்
கடந்த காலங்களில் துபாய் மற்றும் அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோன் விலை அதிகமாகவே இருக்கும். அது ஐபோன் 17க்கும் தொடர்கிறது. சென்னையில் ஒருவர் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் வாங்குவதற்காகத் துபாய்க்குச் சென்று வாங்குவது, சென்னையில் வாங்குவதை விட விலை குறைவாகவே இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் பார்க்கலாம்.
ஐக்கிய அமீரகத்தில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் விலை 5,099 AEDக்கு கிடைக்கிறது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ₹1,22,500ஆகும். அதாவது இந்தியாவை விடத் துபாயில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் சுமார் ₹27,400 குறைவாகவே கிடைக்கிறது. இந்த ஐபோன் மாடலை நீங்கள் துபாய்க்கு போய் வாங்கிவிட்டு சென்னைக்குத் திரும்பி வந்தாலும் கூட, பணத்தைச் சேமிக்க முடியும்.
விமான கட்டணம்
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் இந்த மாதம் 17ம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதை வாங்க நீங்கள் செப்டம்பர் 24ம் தேதி சென்னையில் இருந்து துபாய் செல்ல வேண்டும். ஐபோன் வாங்கிவிட்டு, அங்கிருந்து திரும்பச் சென்னைக்குத் திரும்ப வந்துவிட வேண்டும். இதற்கு விமான டிக்கெட் ரூ.19,700ல் இருந்தே இருப்பதாக ஸ்கைஸ்கேனரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை டூ துபாய் இருவழிப் பயணக் கட்டணம் ரூ.19,700ஆக இருக்கிறது. இதுபோல துபாய்க்கு போய் ஐபோன் வாங்கிவிட்டுத் திரும்பினால் உங்களுக்கு ரூ.8000 வரை சேமிக்க முடியும்.
ஒர்த் தானா?
வெறும் ரூ.8000க்கு அவ்வளவு தூரம் போக முடியுமா என நீங்கள் கேட்கலாம்.. ஐபோன் விலை எந்தளவுக்கு வித்தியாசப்படுகிறது என்பதை காட்டவே இதைக் குறிப்பிட்டோம். அதற்காக நீங்கள் துபாய் போய் வாங்க வேண்டும் என்று இல்லை. அதேநேரம் துபாயில் இருக்கும் உங்கள் நண்பரோ அல்லது உறவினரோ இந்தியாவுக்கு வருகிறார் என்றால் அல்லது நீங்களே துபாய் செல்கிறீர்கள் என்றால் நிச்சயம் அங்கேயே ஐபோன் வாங்கலாம். இதன் மூலம் கணிசமான தொகையை உங்களால் சேமிக்க முடியும்.
ஐக்கிய அமீரகம் மட்டுமில்லை.. ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம், அமெரிக்கா, கனடா எனப் பல நாடுகளுடன் ஒப்பீட்டளவில் இந்தியாவில் ஐபோன் விலை அதிகமாகவே இருக்கிறது. ஹாங்காங்கில் கூட ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் சுமார் ₹34,300 குறைவாகவே கிடைக்கிறது. எனவே, இந்த நாடுகளுக்குச் செல்லும் திட்டம் இருந்தால் அங்கேயே ஐபோன் வாங்குவது சரியானதாகவே இருக்கும்.
பிரச்சனை வருமா
அங்க ஐபோன் வாங்கினால் இங்கு ஒர்க் ஆகுமா.. வாரண்டி கவராகுமா என்ற சந்தேகம் வரலாம்.. உலகில் எந்த நாட்டில் நீங்கள் ஐபோன் வாங்கினாலும் அதை எங்கு வேண்டுமானாலும் யூஸ் செய்யலாம்.. வாரண்டியும் கூட சர்வதேச அளவில் செல்லுபடியாகும் என்பதால் அந்த கவலையும் உங்களுக்கு தேவையில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications