சென்னையின் எத்தனை நாள் ஏக்கம்.. வண்டலூருக்கு இனி வாழ்வு தான்.. பெருங்களத்தூர் மேம்பாலம் திறப்பு
சென்னை: சென்னையில் ஊரை விட்டு வெளியேறி சொந்த ஊர் செல்வோர் எல்லா சாலைகளையும் கடந்து சென்றாலும் பெருங்களத்தூரை தாண்டி போக முடியாது. அந்த அளவிற்கு நெரிசல் நிறைந்த சாலையாக பெருங்களத்தூர் சந்திப்பு இருந்து வந்தது.அந்த நிலை இன்று முதல் மாறப்போகிறது. பெருங்களத்தூரில் செங்கல்பட்டு நோக்கி செல்லும் மேம்பாலம் இன்று திறக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் செல்லவும், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் செல்லவும் ஜிஎஸ்டி சாலையில் தான் போக வேண்டும். தமிழ்நாட்டின் 80 சதவீதம் மக்கள் ஜிஎஸ்டி சாலை வழியாகவே சென்னையை கடந்து வெளியே போக முடியும். சென்னைக்கு வரவும் ஜிஎஸ்டி சாலை தான் பிரதான வழியாகும்.

இதில் பெருங்களத்தூரை தாண்டாமல் சென்னைக்குள் வரவோ அல்லது சென்னையை விட்டு வெளியே செல்லவோ முடியாது. இத்தனைக்கும் பெருங்களத்தூர் என்பது வெறும் ஒரே ஒரு சிக்னல் மட்டுமே உள்ள இடமாகும். தீபாவளி, பொங்கல் உள்பட பண்டிகை நாட்கள் வந்தால், பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசல் கலங்க வைத்துவிடும்.. சென்னையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பெருங்களத்தூர் டிராபிக் எப்போது முடிவுக்கு வரும் என்ற ஏக்கம் இருந்து வந்தது.
ஆனால் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் திறக்காத வரை தான் எல்லாம், சென்னையின் நுழைவு வாயிலான பெருங்களத்தூரில் முன்பு போல் இப்போது டிராபிக் இல்லை. சென்னை கோயம்பேட்டில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள், அவுட்டர் ரிங்ரோடு வழியாக நேரடியாக கிளாம்பாக்கம் போய் விடுகின்றன. இதேபோல் அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படுகின்றன. அதேநேரம் வழக்கமான வாகனங்கள் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துள்ளது. கிளாம்பாக்கம் வரை காரில் சென்று உறவினர்களை வழியனுப்புவது அதிகமாக உள்ளது. இதனால் பீக் அவர்ஸில் வாகன நெரிசல் குறையவில்லை.. இது ஒருபுறம் எனில் பெருங்களத்தூர் மக்களும் மேம்பால பணிகள் முடிவடையாத காரணத்தால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்,
பெருங்களத்தூர் ரயில் நிலையம் கிராஸிங் பகுதியில் மேம்பாலங்கள் இல்லை. அதனால் உள்ளூர் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலையும் இருந்தது இதனால் அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
பாலங்கள் எப்படி: பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராஸிங் மேம்பாலமும், பெருங்களத்தூரில் இருந்து காமராஜர் சாலை மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதேபோல், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலமும் கட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது
இதில் நிலம் கையகப்படுத்தும் பணிகளால் மேம்பாலம் கட்டும் பணிகளுக்கு தொய்வு ஏற்பட்டது. எனினும், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பாலப் பணிகள் விரைவாக கட்டப்பட்டு, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறந்தும் வைக்கப்பட்டது.
அதேபோல் பெருங்களத்தூரில் இருந்து சீனிவாசா நகர் செல்லும் ரயில்வே கிராசிங் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலம் பணிகள் தொடங்குவதற்கு காலதாமதம் ஆனது. பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தி பாலம் கட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், பெருங்களத்தூரில் இருந்து காமராஜர் சாலை வழியாகச் செல்லும் மேம்பாலம் பணிகள் 50 சதவீதம் மட்டுமே நடந்திருந்தது.
நான்கு ஆண்டு காலமாகியும் பணிகள் முடியாத நிலை இருக்கிறது. வனத்துறையிடம் அனுமதி கேட்டு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் காத்திருந்தது, காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் மின்வாரிய அலுவலகத்தை மாற்ற காத்திருந்தது போன்ற காரணங்களால் பணிகள் தாமதம் ஆனது. மின்வாரிய அலுவலகத்தை இடமாற்றம் செய்ய 12 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது விரைவில் அவர்கள் மாற்று இடத்தில் மின்வாரிய அலுவலகத்தை மாற்ற உள்ளதால் சாலைப் பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது
அதேநேரம் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியது. மேம்பாலத்தின் மீது தார் சாலைகள் போடும் பணியும், மேம்பாலத்தின் இருபுறமும் உயர் மின்விளக்குகள் அமைக்கும் பணி கடந்த வாரம் முடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மேம்பாலத்தின் சுற்றுச்சுவரில் வண்ணங்கள் அடிக்கும் பணிகளும் நிறைவடைந்தது.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இன்று மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மேம்பாலம் திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. இந்த மேம்பாலத்தை ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பாலு திறந்து வைக்க உள்ளார். மேலும், இந்த பாலம் திறப்பு விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பெருங்களத்தூர் பகுதி குடியிருப்பு நலச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளார்கள். பல ஆண்டுகளாக பெருங்களத்தூர் பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு இந்த புதிய பாலத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்பதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications