சென்னை வாகன ஓட்டிகளுக்கு பெரிய நிம்மதி.. தி நகர் உஸ்மான் சாலை மேம்பாலம்.. வெளியான சூப்பர் அப்டேட்
சென்னை: தியாகராய நகர் உஸ்மான் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் நெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்றாக விளங்கும் இந்த சாலையில் அமைக்கப்பட்டு இருக்கும் மேம்பால பணிகள் விரைவில் முடியும் என்ற தகவல் வாகன ஒட்டிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகையும் வாகன நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது, முக்கியமான சாலை சந்திப்புகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைப்பது, சாலை விரிவாக்கம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மெட்ரோ ரயில்கள் திட்டமும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் இடங்களில் ஒன்றாக தி.நகர் உள்ளது. சென்னையின் வணிக ஹாட் ஸ்பாட் என்று சொல்லும் அளவிற்கு இங்கு கடைகள் நிரம்பியுள்ளன. இதனால், தி.நகர் உஸ்மான் சாலையில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும். அதிலும் பண்டிகை காலம் நெருங்கிவிட்டால் சொல்லவே தேவையில்லை.
சென்னையில் உள்ள மிக முக்கியமான சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக உஸ்மான் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. தி.நகரில் இருந்து சிஐடி நகருக்கு செல்லும் சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு எல்லாம் தீர்வு காணும் விதமாக புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.
ரூ.164.92 கோடியில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சிஐடி நகர் முதல் பிரதான சாலையில் தற்போதுள்ள தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்வுதளப் பகுதியிலிருந்து சி.ஐ.டி.நகர் 4-வது பிரதான சாலை சந்திப்பை இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. 1,200 மீட்டர் நீளம் மற்றும் 8.40 மீட்டர் அகலத்தில் இரு வழிப்பாதையாக இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
53 தூண்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் பாலம் கட்டுமான பணியால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாலம் கட்டும் பணி முடிந்து பயன்பாட்டிற்கு விடப்பட்டால், தெற்கு உஸ்மான் சாலை-பர்கிட் சாலை-மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை-தென்மேற்கு போக் சாலை-நியூ போக் சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை-சி.ஐ.டி.நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், இந்த பாலம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், இதன் பணிகள் விரைவில் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக இந்த பாலம், டிசம்பர் 2024 க்குள் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், பணிகள் முடிவடையாததால், தாமதம் ஆனது. பின்னர் நடப்பு ஆண்டில் மே மாதத்திற்குள் பாலம் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், திட்டமிட்டபடி திறக்கப்படவில்லை என்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில்தான் பாலம் விரைவில் திறக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications