திடீர் ஷாக் கொடுத்த ஸ்விக்கி, சோமேட்டோ.. இனி உணவு ஆர்டர் போடும் போது பர்சில் வெயிட்டா வச்சிக்கோங்க
சென்னை: உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ ஆகியவை தங்களது பிளாட்பார்ம் கட்டணத்தை ஒரு ஆர்டருக்கு ரூ.10 ஆக உயர்த்தியுள்ளன. தீபாவளி பண்டிகை கால கட்டத்தில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரியில் ஸ்விக்கி, சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. காலை முதல் நள்ளிரவு வரை சென்னை போன்ற நகர சாலைகளில் எப்போதும் டெலிவரி ஊழியர்களை பார்க்க முடியும். மெட்ரொ நகரங்கள் மட்டும் இன்றி சிறு நகரங்கள் வரையிலும் தற்போது ஆன்லைன் உணவு டெலிவரி சேவை விரிவடைந்துவிட்டது.

பிடித்த ஹோட்டல்களிலிருந்து பிடித்த உணவுகளை வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து சாப்பிட முடியும் என்பதால் பலரும் ஆன்லைனில் ஆர்டர் போடுவதை காண முடிகிறது. அதிலும் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆன்லைனில் ஆர்டர் செய்து பலரும் சாப்பிடுவார்கள். இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையானது பெருமளவு விரிவடைந்துவிட்டது. இதனால், ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் நன்றாக கல்லா கட்டுகின்றன.
அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை என்பதால், கொண்டாட்டங்கள் களை கட்டும். மக்களும் விடுமுறை தினங்களில் ஹோட்டல்களில் அதிக அளவு ஆர்டர் செய்து சாப்பிடுவது அதிகரிக்கும். இத்தகைய சூழலில் தான், பிளாட்பார்ம் கட்டணத்தை இரு நிறுவனங்களும் அதிரடியாக உயர்த்தியுள்ளன. சோமேட்டோ நிறுவனம் நேற்று பிளாட்பார்ம் கட்டணத்தை ரூ.10 ஆக உயர்த்திய நிலையில், பெங்களூரை தலைமையிடமாக கொண்ட ஸ்விக்கி நிறுவனமும் இன்று தனது பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இதற்கு முன்பாக பிளாட்பார்ம் கட்டணம் சோமேட்டோவில் ரூ.6 ஆகவும், ஸ்விக்கியில் 7 ஆகவும் இருந்தது. தற்போது பண்டிகை காலத்திற்கு முன்பாக இப்படி அதிரடியாக உயர்த்தப்பட்டு இருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் பிளாட்பார்ம் கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப்படுவதாக சோமேட்டோ நிறுவனம் தனது செயலியில் தெரிவித்துள்ளது.
இதனால், இந்த கட்டண உயர்வு தற்காலிகமானதாக இருக்கலாம் எனவும் தேவை அதிகரிப்பால் அதை சமாளிக்கும் வகையில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக சோமேட்டோ தெரிவித்துள்ளது. எனினும் ஸ்விக்கி நிறுவனம் இப்படியான எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
பிளாட்பார்ம் கட்டணம் என்றால் என்ன?: இதனால் ஸ்விக்கி நிறுவனத்தின் கட்டண உயர்வு நிரந்தரமானதாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் உணவுக் கட்டணம், டெலிவரி கட்டணம் போக பிளாட்பார்ம் கட்டணம் என தனியாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றன. இந்த பிளாட்பார்ம் கட்டணத்திற்கு 18 சதவிகித ஜிஎஸ்டியும் உண்டு. இதனால், சோமேட்டோவில் பிளாட்பார்ம் கட்டணமாக ரூ.11.80 இனி வசூலிக்கப்படும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications