ஜமாய்ச்சுட்டாரே கமல்ஹாசன்.. ஓடுறது, நீந்துறது, பறக்குறது! அசர வைக்கும் அசைவ விருந்து - இதான் மெனு
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலங்கள், ஊடகத்துறையினர் என பலருக்கு அசைவ விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். அதில் இடம்பெற்ற உணவு வகைகள் என்னவென்று பார்ப்போம்.
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் இதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு தலைவர்கள் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனது பிறந்தநாளை முன்னிட்டு அவர், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தருவிக்கும் ஆர்ஓ இயந்திரம் ஒன்றை வழங்கினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மா சுப்ரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இன்று மதியம் 3 மணியளவில் சென்னையில் அவரது பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிவிப்பில், "நமது தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்புடன் கொண்டாட நமது கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்பிய வண்ணம், தலைவரின் பிறந்தநாளான 07-11-2023 அன்று, மாலை 3மணிக்கு சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K.Convention Centre அரங்கில் தொண்டர்களும் நற்பணி நம்மவர்களும் சூழ, வெகுசிறப்புடன் கொண்டாடப்பட இருக்கிறது.

ஆழ்ந்த அறிவும், எல்லையில்லா ஆற்றலும், பலகோடி மக்களை ஈர்க்கும் வல்லமையும், தேர்ந்த ஆளுமையும் கொண்ட நமது தலைவரின் பிறந்தநாளை கொண்டாடவும், நாடாளுமன்றத் தேர்தலை எழுச்சியோடு எதிர்கொள்ளவும் நவம்பர் 7 (செவ்வாய்க்கிழமை) அன்று நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நற்பணி நம்மவர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் மற்றும் ம.நீ.ம உறுப்பினர்கள் அனைவரையும் தலைவர் நம்மவரின் பிறந்தநாளினை சிறப்பாக கொண்டாடிட வரவேற்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்காக அனைவரும் வருகை தந்து உள்ளார்கள். முன்னதாக நேற்று பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் விருந்து கொடுத்து இருக்கிறார் கமல்ஹாசன். அதில் ஓடுவது, பறப்பது, நீந்துவது என அனைத்து வகை அசைவ உணவு, பிரியாணி, ஜிகர்தண்டா, பரோட்டா என அரேபியன் முதல் ஆம்பூர் வரை அனைத்து வகையான உணவு வகையினையும் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் குழுவினர் ருசி ருசிக்க சமைத்து ஜமாய்த்து உள்ளனர்.

அதில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை பார்ப்போம். நூல் பரோட்டா, நீலகிரி சிக்கன் கிரேவி, நீலகிரி காளான் குழம்பு, கொங்கு ஸ்பெஷல் விறகு மட்டன் தம் பிரியாணி, கொங்கு எஸ்பிஎல் வெஜ் மட்டன் தம் பிரியாணி - ரைத்தா, பொன்னி அரிசி சாதம் - மட்டன் சிறுவாணி தண்ணி குழம்பு, மதுரை ஆயிர மீன் குழம்பு - வெஜ் மீன் குழம்பு, எலும்பு ரசம் , மிளகு ரசம், குல்கந்த் தயிர், சிக்கன் ரேஷ்மி டிக்கா - மதுரை மட்டன் கோலா, வஞ்சரம் தவா மீன் பொரியல் - நல்லாம்பட்டி நாட்டுக்கோழி வருவல், பிச்சு போட்ட கோழி வருவல் - வெஜ் கோலா உருண்டை, மினி உருளைக்கிழங்கு மிளகு சாப்ஸ், தென்னக்குருத்து பொரியல் - வயலட் முட்டைக்கோஸ் தோரன் - நாகர்கோவில் அவியல், கேரளா அட பிரதமன் பாயசம் - அப்பளம் ஊறுகாய் ஆகிய உணவு வகைகளும், மதுரை விளக்குத்தூண் ஜிகர்தண்டா, விருப்பாச்சி வாழை, ஐஸ் பீடா ஆகியவை இடம்பெற்று உள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications