தவெக சார்பாக இப்தார் நோன்பு.. 2,000 பேருக்கு தயாராகும் மட்டன் பிரியாணி.. வெளியாகிய உணவுப்பட்டியல்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இன்று மாலை நடக்கவுள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதற்கான உணவுப் பட்டியல் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று நோன்பு இருந்து இஸ்லாமிய முறைப்படி தொழுகையில் ஈடுபடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியின் செயல்பாடுகள் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. அண்மையில் நடைபெற்ற தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் நடிகர் விஜய் இந்தி திணிப்பு விவகாரம் குறித்து பேசி இருந்தார். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், திமுக மற்றும் பாஜகவையும் கடுமையாக சாடினார்.

அதேபோல் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று தவெக ஆதரவு அளித்தது. இன்னும் ஓரிரு மாதங்களில் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அக்கட்சியினர் அரசியல் செயல்பாடுகள் அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது.
அந்த வகையில் ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இன்று ஒய்எம்சிஏ மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்டத்திற்கு 5 நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் தொடங்கி ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தவெக தலைவர் விஜய் இன்று ஒருநாள் முழுதும் நோன்பு இருந்து இஸ்லாமியர்களின் முறைப்படி தொழுகை செய்து இப்தார் விருந்தை எடுத்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் தவெக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவுப் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
இதன்படி 2 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா மற்றும் நோன்பு கஞ்சி ஆகியவை தயாராகி வருகிறது. சமையல் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தவெக நிர்வாகிகள் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்க உள்ளதால், தவெக தொண்டர்களின் கவனமும் குவிந்துள்ளது.
மேலும் தவெக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு அமைப்புகளுக்கும், அருகில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் யார் யார் பங்கேற்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அனைத்து தரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்!












Click it and Unblock the Notifications