Food: 4 பிரட்டும், கடலைமாவும் இருந்தா போதும்! சிம்பிளான இந்த ஸ்னாக்ஸை சுவையா ட்ரை பண்ணலாம்!
சென்னை: மாலை வேளை வந்தாலே வீட்டில் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை எதாவது வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து தர சொல்லி கேட்கிறார்களா? வீட்டிற்கு திடீரென விருந்தினர்கள் வந்தால் அவர்களுக்கும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யக்கூடிய இந்த பக்கோடாவை செய்து கொடுக்கலாம். அதன்பிறகு பாருங்க பாராட்டிற்கு பஞ்சம் இருக்காது. அப்போ மொறு மொறுப்பான இந்த ஸ்னாக்ஸை சட்டென செய்து அசத்தலாம் வாங்க.

தேவையான பொருட்கள்.
பிரட் - 4.
பிரட் தூள் -1/2கப்
அரிசி மாவு - 1 ஸ்பூன்.
கடலை மாவு - 1 ஸ்பூன்.
நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
இஞ்சி - சிறிது
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 3
உப்பு, எண்ணெய்-தேவைக்கு
பிரட் பக்கோடா செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட பிரட்டை சிறிது தண்ணீரில் போட்டு எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீரை உறிஞ்சியதும் நன்றாக பிசைந்து மாவு போல எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் பிரட்தூள், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய, பூண்டு, நறுக்கிய வெங்காயம், உப்பு, கடலைமாவு, அரிசி மாவு கலந்து தண்ணீரை லேசாக தெளித்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நன்றாக சூடானதும் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் ருசியான பக்கோடா ரெடி.
தற்போது ரெடியான பக்கோடாவை தட்டில் வைத்து இப்போது பரிமாறுங்கள். மீண்டும் கண்டிப்பாக செய்துதர சொல்லுவார்கள். மறக்காமல் உங்கள் அனுபவத்தை கமெண்டில் பதிவிடுங்கள். (எழுதியவர், சென்னையை சேர்ந்த நமது வாசகி எம். வசந்தா)
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications