Food: ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸுக்கு.. பாசிப்பருப்பு பக்கோடா ட்ரை செஞ்சு பாருங்க.. சுவை அள்ளும்!
சென்னை: தின்பண்டங்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் வீட்டில் இருக்கும் வாண்டுகளுக்கு மொறு மொறு என்று ஏதாவது கிடைத்தால் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பார்கள். ஒரு கப் பாசிப்பருப்பு போதும், டக்குனு இந்த போண்டா செய்து அசத்தலாம்.
பாசிப்பருப்பு போண்டா செய்வது எப்படி என்பதை பார்க்கலாமா? முதலில்

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
மல்லி விதை - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் மிக்ஸியில் மல்லி, சோம்பை ஒன்றிரண்டாக பொடிக்கவும். பாசிப்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். அது ஊறிய பின் நீரை வடித்து, மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைக்கவும். இதனுடன் ஏற்கனவே அரைத்த பொடி மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
பின்னர் நன்கு சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான பாசிப்பருப்பு பக்கோடா ரெடி. மேலும் சுவையை கூட்ட புதினா, கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட ருசியோ ருசிதான். இதை உடனடியாக செய்து பார்த்து எங்களுடன் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். (எழுதியவர், சென்னையை சேர்ந்த நமது வாசகி எம். வசந்தா)
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications