Food: சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸுக்கு.. ஒரு கப் ஓட்ஸ் இருந்தா போதும்.. ருசியா செய்யலாம்!
சென்னை: அடடா.. மாலை நேரம் வந்தாலே, வீட்டில் இருக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஸ்னாக்ஸ் கேட்டு தொல்லை செய்கிறார்களா? ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய ஒரு போண்டா ரெசிபியோட இன்னைக்கு வந்துருக்கேன்.
என்ன போண்டா அப்படின்னு யோசிக்கிறீங்களா? இதுவும் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சட்டென செய்ய கூடிய சிற்றுண்டி தான். இப்போது ஓட்ஸ் போண்டா செய்வதற்கு என்னென்ன தேவை பார்க்கலாமா..

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
மல்லி இலை - கைப்பிடி
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
ஒட்ஸில் வெந்நீர் தெளித்து சிறிது நேரம் ஊற வைக்கவும். அதே சமயம் உளுந்தை நன்றாக கழுவி 1/2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்து எடுக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி , பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, தேவையான அளவு மிளகு, சீரகம், உப்பு சேர்த்து ஊறிய ஓட்ஸுடன் கலக்க வேண்டும். பின்னர் அரைத்து எடுத்த உளுந்து மாவுடன் இதை சேர்த்து நன்றாக கலந்து சிறு, சிறு போண்டாக்களாக உருட்டி எடுத்து கொள்ளவும்.
பின்னர் நன்றாக காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான சத்தான ஓட்ஸ் போண்டா ரெடி.
இதை தட்டில் எடுத்து கொஞ்சம் தேங்காய் சட்னியுடன் சாப்பிட இன்னும் வேண்டும் என விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். (எழுதியவர், சென்னையை சேர்ந்த நமது வாசகி எம். வசந்தா)
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications