இது லிஸ்ட்லேயே இல்லையே.. 2031-ல் தான் பல விஜய் ரசிகர்களுக்கு ஓட்டுரிமையே வருது.. வெயிட்டிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு நிலநடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், அடுத்த 5 ஆண்டுகளில் வரப்போகும் மாற்றம் ஒரு 'அரசியல் பிரளயமாக' இருக்கலாம். ஏனெனில் யாருமே எதிர்பார்க்காத இன்னொரு விஷயம் வெயிட்டிங்.. அடுத்த ஐந்து வருடத்தில் பல லட்சம் விஜய் ரசிகர்களுக்கு ஓட்டுப்போடும் வயது வரப்போகிறது என்பது தான் அந்த விஷயம். இன்னும் பல குழந்தைகள் விஜய் ரசிகர்களாக உள்ள நிலையில், அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வாக்களிக்கும் வயது வரும். அப்போது எப்படி இருக்கும் என்பது தான் பெரிய பேசு பொருளாக உள்ளது.

2026 சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் முன்னிலை பெற முக்கியக் காரணம் 18 முதல் 40 வயது வரையிலான இளைஞர்கள். ஆனால், இப்போது திராவிடக் கட்சிகள் கவனிக்கத் தவறிய ஒரு விஷயம் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது 13 முதல் 17 வயதுக்குள் இருக்கும் சுமார் 40 முதல் 50 லட்சம் மாணவர்கள், அடுத்த 5 ஆண்டுகளில் (2031 தேர்தலில்) புதிய வாக்காளர்களாக மாறப்போகிறார்கள். இவர்களில் பலர் விஜய்யின் தீவிர ரசிகர்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும் இந்த 50 லட்சம் புதிய வாக்காளர்கள் என்பது ஒரு கட்சியின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய பலம்.

For many Vijay fans the right to vote will only become available in 2031 A twist for the Dmk

இப்போது பள்ளி மாணவர்களாக இருக்கும் விஜய் ரசிகர்கள், 2031-ல் முதல்முறை வாக்காளர்களாக களம் இறங்குவார்கள். அவர்கள் வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காமல் விஜய்க்கு வாக்களித்தால் மீண்டும் விஜய்யே வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது

2026 தேர்லை பொறுத்தவரை திமுக, அதிமுக-வின் வாக்கு வங்கியிலும் விஜய் கைவைத்துள்ளார். அடுத்த தேர்தலில் இந்த 50 லட்சம் கூடுதல் வாக்குகள் தவெக-வின் பக்கம் சாயும் போது, திராவிடக் கட்சிகளின் வாக்கு சதவீதத்தில் பெரும் சரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 2026 தேர்தலை பொறுத்தவரை கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், திமுக, அதிமுகவை விரும்பாத ஏராளமான இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் தவெகவிற்கு வாக்களித்துள்ளனர். விஜய்க்கு எதிரான கடுமையான ஆன்லைன் விமர்சனங்கள், ஊடகங்களின் விமர்சனங்களை புறந்தள்ளி, பெண்கள் பலர் வாக்களித்திருப்பது திராவிட கட்சிகளை வாயடைத்து போக வைத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தொகுதி, உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி, பல அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் தவெக முன்னிலை வகிக்கிறது. தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறார். தவெக முக்கிய நிர்வாகிகள் பலர் முன்னிலை வகிக்கிறார்கள். தவெக தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு இன்னும் முன்னிலை பெறவில்லை..

எனினும் சில கட்சிகள் இப்போதே விஜய் கட்சியில் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளது. எனவே அதிமுக, திமுக இல்லாமலேயே விஜய் ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பாஜக நிலைப்பாடு என்ன, காங்கிரஸ் நிலைப்பாடு என்ன.. பாமக நிலைப்பாடு என்ன.. யார் தவெக பக்கம் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+