தமிழக பட்ஜெட்டில் நடக்க போகும் தரமான சம்பவம்.. முதல்முறை இப்படி ஒரு முடிவு.. தங்கத்தின் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்முறையாக மாநில நிதிநிலை தொடர்பான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறது தமிழ்நாடு அரசு.

வரும் 14ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது. பட்ஜெட்டில் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், புதிய அறிவிப்புகள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 14ம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், முதல்முறையாக அன்று பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கிறது தமிழ்நாடு அரசு.

old pension scheme pension

தமிழ்நாடு பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, வரும் ஆண்டுகளில் மாநில நிதிநிலை எப்படி இருக்கும் என பல்வேறு தரவுகள் இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறும்.

பொருளாதார ஆய்வறிக்கையை தயாரிப்பது யார்?

பொருளாதார ஆய்வறிக்கை நிதி அமைச்சகத்தில் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவால் தயாரிக்கப்படுகிறது.

பொருளாதார ஆய்வு அறிக்கையில் என்ன இருக்கும்?

பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது பொருளாதாரத்தின் நிலை மற்றும் பல்வேறு குறிகாட்டிகள் பற்றிய டேட்டாக்களை கொண்டு இருக்கும். நடப்பு ஆண்டிற்கான பொருளாதாரம் எப்படி இருக்கும், ஜிடிபி எப்படி இருக்கும், விலைவாசி எப்படி இருக்கும், பணவீக்கம் எப்படி இருக்கும் என்ற விவரங்களையும் இது.வழங்கும் .
பொருளாதார ஆய்வு ஆவணம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

பொருளாதார ஆய்வு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஆவணத்தின் முதல் பகுதியில் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் பற்றிய விவரங்கள் இருக்கும். இது பொருளாதாரம் பற்றிய ஒட்டுமொத்த மதிப்பாய்வையும் வழங்கும். இரண்டாம் பாகம் கடந்த நிதியாண்டில் பணவீக்கம், ஜிடிபி ஆகியவை பற்றிய விவரங்களை கொண்டு இருக்கும்.

பட்ஜெட் அறிவிப்பு

அடுத்த சில வாரங்களில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்த உரிமை தொகை உயர்த்தப்படுமா என்ற கேள்வி உள்ளது. கர்நாடகாவில் ரூ.1500 வழங்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் இதே தொகை வழங்கப்படுகிறது. பஞ்சாப்பில் 1200 ரூபாய் பலருக்கு வழங்கப்படுகிறது. டெல்லியில் பாஜக 2500 ரூபாய் வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் ரூ.1000 மட்டுமே வழங்கப்படுவதால்.. இதை உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

3 மாதங்களில் தமிழ்நாட்டில் அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் சில வாரங்களில் இதற்கான வேலைகள் துவங்கும்.. புதிய விண்ணப்பங்களை ஏற்கப்படும், ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

பழைய ஓய்வூதியம்

தமிழ்நாடு பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போது இந்த ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதை பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு இது தொடர்பாக ஆய்வு பணிகளை செய்து வருகிறது.

கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.

எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01:04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+