37வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.. இன்றைய விலை என்ன?
சென்னை: நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலையில் 37வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 105.41 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 96.67 க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் 121 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 104 ரூபாயை தாண்டி உள்ளது.
இந்தியாவிலும் கடந்த பிப்ரவரி - மார்ச் மாதம் தொடர்ச்சியாக 17 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. மார்ச் 6ம் தேதி வரை தினமும் பெட்ரோல் டீசல் விலை 30 பைசா முதல் 80 பைசா வரை தினமும் உயர்ந்தது. இது மக்கள் இடையே பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் மட்டும் பெட்ரோல் விலை 9.56 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 9.86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்தது. பல மாநிலங்களில் டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளின் விலைகள் உயர்ந்தன.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
இந்த நிலையில் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்த பெட்ரோல் டீசல் விலை தற்போது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலையில் 37வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.
-
பூமிக்கு அடியில் ஒளிந்திருக்கும் பொக்கிஷம்.. இந்தியாவை மாற்றப்போகும்.. மோடியின் மெகா திட்டம் -
திணறும் மத்திய அரசு! 1 மணிநேரத்திற்கு ரூ.25 கோடி இழப்பு.. பெட்ரோல், டீசல் விலையை 4 முறை உயர்த்தியும் இப்படி! -
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
“ரூ.10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டியிருக்கும்..” பெட்ரோல் விலை குறித்து வாயை விட்ட நிர்மலா சீதாராமன் -
உங்கள் வீட்டில் எத்தனை கேஸ் கனெக்ஷன்.. மத்திய அரசு போட்ட புதிய ரூல்ஸ் தெரியுமா? -
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா? -
பட்ஜெட்டில் துண்டு போடும் பெட்ரோல் விலை.. இந்தியாவிலேயே உச்சம் எங்கு தெரியுமா? சென்னைக்கு எந்த இடம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications