“தவெகவுக்கு திமுக மட்டுமே எதிரி.. அதிமுக ஒரு கட்சியே இல்லை” - செங்கோட்டையன் பேட்டி
சென்னை: தவெகவை பொறுத்தவரை திமுக மட்டுமே எதிரி என்றும், அதிமுக என்பது என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் 10-ல் ஒரு கட்சி என்றும், அதிமுக என்பது கட்சியே இல்லை என்றும் கோபிச்செட்டிபாளையத்தில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

விஜய் தலைமையிலான தவெகவில், விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. கட்சியில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவெக தலைவர் விஜய், தேர்தல் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். சேலத்தில் வரும் 13 ஆம் தேதி பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார் விஜய்.
இந்நிலையில், ஈரோட்டில் இன்று தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "தவெகவை பொறுத்தவரை எங்களுக்கு திமுகதான் எதிரி.
தேசிய ஜனநாயக கூட்டணியில் 10 கட்சிகளில் ஒன்று அதிமுக. அதிமுக ஒரு கட்சியே அல்ல. தவெக சார்பில் போட்டியிட நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். விருப்ப மனுவை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூர் பகுதியில் நிறைய பேர் குடியிருக்கிறார்கள். குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் விருப்ப மனுவை பதிவு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications