Forbes வெளியிட்ட சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியல்! டாப் 10ல் அமெரிக்கா, சீனா, சவுதி! இந்தியா மிஸ்சிங்
சென்னை: ஃபோர்ப்ஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் 10 சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இஸ்ரேல் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியல் பல முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், அதிக மக்கள் தொகை, நான்காவது பெரிய ராணுவம் மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட இந்தியாவை பட்டியலில் சேர்க்காதது பல கேள்விகளையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
இருப்பினும், இந்த பட்டியல், ஐந்து முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று ஃபோர்ப்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது. அவை இவைதான்: தலைமைத்துவம், பொருளாதார செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு, வலுவான சர்வதேச கூட்டணிகள் மற்றும் ஒவ்வொரு நாட்டின் ராணுவ வலிமை.

WPP என்ற உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஒரு பிரிவு BAV குரூப், மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் ரீப்ஸ்டீன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், US நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட்டுடன் இணைந்து இந்த தரவரிசை மாதிரியை உருவாக்கியதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நாடுகளில் இந்தியாவின் இடம்
2025 பிப்ரவரி நிலவரப்படி, உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. பொருளாதார நிலைமைகள், வலுவான சர்வதேச கூட்டணிகள் மற்றும் ராணுவ வலிமை போன்ற காரணிகளால் இந்த தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் ஜப்பானைத் தொடர்ந்து இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
சக்தி வாய்ந்த டாப் 10 நாடுகள்
- அமெரிக்கா: மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP): $30.34 டிரில்லியன்; மக்கள் தொகை: 345 மில்லியன்; அமைவிடம்: வட அமெரிக்கா.
- சீனா: மொத்த உள்நாட்டு உற்பத்தி: $19.53 டிரில்லியன்; மக்கள் தொகை: 1.419 பில்லியன்; அமைவிடம்: ஆசியா.
- ரஷ்யா: மொத்த உள்நாட்டு உற்பத்தி: $2.2 டிரில்லியன்; மக்கள் தொகை: 144 மில்லியன்; அமைவிடம்: ஆசியா.
- ஐக்கிய இராச்சியம்: மொத்த உள்நாட்டு உற்பத்தி: $3.73 டிரில்லியன்; மக்கள் தொகை: 69 மில்லியன்; அமைவிடம்: ஐரோப்பா.
- ஜெர்மனி: மொத்த உள்நாட்டு உற்பத்தி: $4.92 டிரில்லியன்; மக்கள் தொகை: 84 மில்லியன்; அமைவிடம்: ஐரோப்பா.
- தென் கொரியா: மொத்த உள்நாட்டு உற்பத்தி: $1.95 டிரில்லியன்; மக்கள் தொகை: 52 மில்லியன்; அமைவிடம்: ஆசியா.
- பிரான்ஸ்: மொத்த உள்நாட்டு உற்பத்தி: $3.28 டிரில்லியன்; மக்கள் தொகை: 66 மில்லியன்; அமைவிடம்: ஐரோப்பா.
- ஜப்பான்: மொத்த உள்நாட்டு உற்பத்தி: $4.39 டிரில்லியன்; மக்கள் தொகை: 123 மில்லியன்; அமைவிடம்: ஆசியா.
- சவுதி அரேபியா: மொத்த உள்நாட்டு உற்பத்தி: $1.14 டிரில்லியன்; மக்கள் தொகை: 34 மில்லியன்; அமைவிடம்: ஆசியா.
- இஸ்ரேல்: மொத்த உள்நாட்டு உற்பத்தி: $550.91 பில்லியன்; மக்கள் தொகை: சுமார் 9.38 மில்லியன்; அமைவிடம்: ஆசியா.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications