திமிங்கலம் திரும்பி வருவது உறுதி.. திமிறி எழும் மறைமலைநகர்! தமிழ்நாட்டிற்கு ஜாக்பாட்.. என்ன நடக்குது
சென்னை: சென்னை மறைமலைநகரில் உள்ள போர்ட் மீண்டும் உற்பத்தியை மேற்கொள்ள உள்ளது. போர்ட் வருவதில் தாமதம் ஏற்படலாம் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன. ஆனால் போர்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்.. நாங்கள் கண்டிப்பாக சென்னைக்கு திரும்புகிறோம். மீண்டும் ஆலையை திறப்பதற்கான கடைசி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அறிவித்து உள்ளது.
சென்னையில் இருந்து இவி வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளனர். அதை வெளிநாட்டு மார்க்கெட்டில் விற்க உள்ளனர்.

சென்னைக்கு போர்ட் திரும்பி வந்தாலும் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்வது கடினம். அவர்கள் இந்திய மார்கெட்டிற்கு வர வாய்ப்பு இல்லை. மாறாக சென்னையில் உற்பத்தி செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வார்கள். 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை யூனிட், ஆண்டுக்கு 200,000 வாகனங்கள் மற்றும் 340,000 இன்ஜின்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
கிட்டத்தட்ட கடந்த 4 வருட காலத்திற்கு பின் சென்னைக்கு போர்ட் திரும்பி வந்துள்ளது. தமிழ்நாடு தொழிற்துறையின் தீவிரமான முயற்சியால்.. தொடர் பேச்சுவார்தையால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது.
டபுள் ஜாக்பாட்: போர்டு நிறுவனம் இந்தியாவில் Mustang Mach-E வாகனத்தின் டிரேட் மார்க்கை பதிவு செய்துள்ளது. இது இந்திய சந்தையில் போர்ட் மீண்டும் நுழைவதை உறுதி செய்துள்ளது. அடுத்த தலைமுறை எண்டெவர் கார்கள் இதன் மூலம் போர்ட் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.
Ford நிறுவனம் முதலீடுகள்; அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன. ஆனாலும் Ford நிறுவனம் சென்னையை விட்டு சென்றது சென்னைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
தொழிற்சாலை மூடல்: தமிழ்நாட்டில் போர்ட் தொழிற்சாலை மூடப்பட்ட போது அந்த தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வீட்டில், டாடா குழுமத்தின் தலைவர் . என்.சந்திரசேகரன் முதல்வரை சந்தித்து பேசினார். ஆனால் போர்ட் திரும்பி வரும் அறிகுறி அப்போதே வழங்கப்பட்டதால் டாடா தனியாக முதலீடு செய்தது. தற்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல.. போர்ட் நிறுவனமும் திரும்பி உள்ளது. பெரும்பாலும் Mustang Mach-E வாகனத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமிங்கலம் போல திமிறி எழும் மறைமலைநகர்: சென்னையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மறைமலைநகரில் உள்ள ஹென்றி ஃபோர்டு சாலை தற்போது மீண்டும் திமிறி எழுந்துள்ளது. 2022ல் ஃபோர்டு இந்தியா ஆலை செயல்படுவதை நிறுத்தியதில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாகவே இருந்தது அந்த பகுதி.
தற்போது போர்ட் வருகை காரணமாக அங்கே புத்துணர்ச்சி ஏற்பட்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மறைமலை நகர் மாறியுள்ளது.
ஒரு காலத்தில் சென்னையின் புறநகரில் குறைவாக வளர்ச்சியடைந்த பகுதி, இப்போது எட்டு வழிச் சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றைக் கொண்டு பெரிய அளவில் மறைமலைநகர் முன்னேறி உள்ளது. முன்பு ஒரு சில தேநீர்க் கடைகள் மட்டுமே இங்கே இருந்தன. பாண்டலூன்ஸ் மற்றும் ட்ரெண்ட்ஸ் போன்ற பெரிய வணிகச் சங்கிலிகளும், கேஎஃப்சி, பர்கர் கிங் மற்றும் மெக்டொனால்ட்ஸ் போன்ற துரித உணவு கடைகள் இங்கே அதிக அளவில் வந்துள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் இங்கே போர்ட் வருவது சென்னையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். அதோடு சென்னை விரிவடைய முக்கிய காரணமாக அமையும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications