அந்த நேரம் பார்த்து வந்த பெண் காவலர்: சரமாரியாக அடித்து உதைத்த வெளிநாட்டு பெண் கைதிகள்; புழலில் ஷாக்
சென்னை: சென்னை புழல் பெண்கள் சிறையில் செல்போன்களை பறிமுதல் செய்ததால் சிறை காவலரை வெளிநாட்டு பெண் கைதிகள் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புழல் பெண்கள் சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குதான் வெளிநாட்டு கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். உகாண்டா நாட்டைச் சேர்ந்த சாண்ட்ரா (வயது 32) மற்றும் மாலத்தீவை சேர்ந்த சம்சியா(30) ஆகிய 2 வெளிநாட்டு பெண்கள், போதை பொருள் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர்.
புழல் பெண்கள் சிறையில் சனிக்கிழமை இரவு பெண் சிறை காவலர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது வெளிநாட்டு பெண் கைதிகள் இருவரும் தங்கள் அறையில் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த சிறை காவலர், இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். இருவரிடம் இருந்தும் செல்போன்களை பறிமுதல் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வெளிநாட்டு பெண் கைதிகள் இருவரும், பெண் சிறை காவலரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனால் அந்த பெண் காவலருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறை நிர்வாகம் தரப்பில் புழல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்கள் புழல் சிறைக்கு வந்து, வெளிநாட்டு பெண் கைதிகளுக்கு சிறைக்குள் செல்போன் கிடைத்தது எப்படி? அவர்கள் யாருடன் பேசினார்கள்? எனவும், சிறை காவலரை தாக்கியது குறித்தும் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பெண்கள் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே புழல் தண்டனை சிறையில் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கோட்டி என்ற கோடீஸ்வரன்(37) கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று அடைக்கப்பட்டு உள்ளார். சனிக்கிழமை இரவு தனது அறையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட சிறை போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர். இதுபற்றியும் புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர். புழல் சிறையில் செல்போன்கள் கைதிகளிடம்எப்படி புழங்குகிறது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications