நடிகர் விக்ரம் வீடியோ சர்ச்சை! லார் கிப்பான் குரங்குகள் உள்பட 11 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உரிய அனுமதி இல்லாமல் கேசவநாதன் வைத்திருந்த இரு லார் கிப்பான் குரங்கு உள்பட 11 அரிய வகை விலங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

விக்ரம் தனது 63 ஆவது திரைப்பட்தில் நடித்து வருகிறார். அண்மையில் ஒரு குரங்குடன் விளையாடும் வீடியோவை விக்ரம் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். குரங்கிடம் பேசிக் கொண்டே அதை போல் முகப்பாவனைகளை மாற்றும் வகையில் அந்த வீடியோ அமைந்திருந்தது.

Vikram rare monkey

அந்த குரங்கு அரிய வகையானது என சொல்லப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட லார் கிப்பான் என்பது இந்த குரங்கின் பெயர் ஆகும்.

இது தற்போது அழிவின் விளிம்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட அரியவகை உயிரினம் ஆகும். இந்த பாதுகாக்கப்பட்ட வெளிநாட்டு விலங்கை வளர்ப்பது சட்டவிரோதம். அதற்கான உரிய அனுமதியை காவல் துறையிடம் பெற்று அந்த ஆவணங்களுடன் வளர்க்கலாம்.

இந்த குரங்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விக்ரம் சம்பந்தியின் பண்ணை வீட்டில் வளர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. குரங்கு குறித்து சர்ச்சை எழுந்ததும் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை நடிகர் விக்ரம் நீக்கியுள்ளார்.

குரங்கு குறித்த வீடியோ வைரலான நிலையில் வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அந்த குரங்கு ஈரோட்டில் உள்ள நபர் விக்ரமின் மகள் வீட்டிற்கு விற்பனை செய்ததாக தெரிகிறது. அங்கு விடுமுறைக்கு சென்ற விக்ரம், அந்த குரங்குடன் விளையாடி வீடியோ போட்டதும் தெரியவந்தது.

மணிப்பூரைச் சேர்ந்த லைக்ராம் சிங் என்பவர் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 கிப்பான் குரங்குகள் தன்னிடம் இருப்பதாக கடந்த 2020 ஆம் ஆண்டு மத்தி அரசின் பரிவேஷ் எனும் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மணிப்பூரில் இருந்து 3 கிப்பான்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கேசவநாதன் என்பவருக்கு தத்தெடுப்பு முறையில் கொடுக்கப்பட்டதாம். அதில் ஒன்று இறந்துவிட்ட நிலையில் மற்ற இரு குரங்குகள் உயிருடன் இருக்கின்றன.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரோட்டில் இருந்து 2 கிப்பான்கள் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் என்பவருக்கு (இவரது மகனைத்தான் விக்ரம் மகள் திருமணம் செய்துள்ளார்) விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விற்பனைகளுக்கு வனத்துறையின் அனுமதி ஏதும் இல்லை என சொல்லப்படுகிறது.

இதையடுத்து கேசவநாதன் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத நிலையில் பண்ணை வீட்டில் இருந்த அரிய வகை விலங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இரண்டு லார் கிப்பான் குரங்குகள், 7 செர்வால் கேட் என்னும் நெடுங்காற் பூனைகள், இரு டப்டெட் கேப்புசின் எனப்படும் அடற்சுருட்டை வால் குரங்கு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த விலங்குகள் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அல்லது அங்குள்ள மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். விக்ரமிடம் கொடுக்கப்பட்ட 3 நாட்கள் கெடு முடிந்துள்ள நிலையில் அவர் மீது வனத்துறை ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா இல்லை அவர் உரிய விளக்கம் அளித்துள்ளாரா என தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+