ஒருவனுக்கு ஒருத்தி! பெண்ணுக்கு மரியாதை! ஆஹா கழுதைப்புலியின் குணங்கள்.. லியோ படத்தின் கதைக்கரு என்ன?
சென்னை: லியோ படத்தில் வரும் கழுதைப் புலியின் குணநலன்கள் என்ன? ஹைனாக்கள் இத்தனை புத்திக் கூர்மை கொண்ட காட்டை பாதுகாக்கும் விலங்கு என்பது குறித்து வனச்சரகர் விளக்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகர் சதீஷ் நிர்மல் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று நாம் பேச போகும் டாபிக் ஹைனாஸ், அதாவது கழுதை புலிகள்! கடந்த வரம் லியோ படத்தின் டிரெய்லர் பார்த்திருப்பீர்கள். அதில் ஹீரோ ஒரு வன உயிரினத்துடன் சண்டையிடும் காட்சியை பார்த்திருப்பீர்கள்.

அதில் வரும் உயிரினம்தான் கழுதை புலி (Hyena). உலகில் 4 வகையான கழுதை புலிகள் உள்ளன. அவை: 1. ஸ்பாட்டட் ஹைனாஸ் - உடல் முழுவதும் புள்ளி புள்ளியாக இருக்கும். 2. ஸ்ட்ரைப்டு ஹைனாஸ்- உடல் முழுவதும் வரிகள் இருக்கும் கழுதை புலிகள். 3. கிரே ஹைனாஸ்- உடலில் வரிகளோ புள்ளிகளோ இருக்காது, உடல் முழுவதும் சாம்பல் நிறத்தில் இருக்கும். 4. ஆர்டு வுல்ஃப் - இது பார்ப்பதற்கு ஓநாய் போல் இருக்கும். ஆனால் இது கழுதை புலி!
இவை ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய கண்டத்திலும் இருக்கின்றன. இந்த 4 வகை கழுதை புலிகளுமே இந்தியாவில் இருக்கின்றனவா என்றால் இல்லை. வரிகள் கொண்ட கழுதை புலிகள்தான் இந்தியாவில் இருக்கிறது. தமிழகத்திலும் கழுதை புலிகள் உள்ளன. இந்த கழுதை புலிகளின் முன்னங்கால்கள் நீளமாகவும் இதன் பின்னங்கால்கள் குட்டையாகவும் இருக்கும்.
இதன் தாடைகள் மிகவும் வலிமையாக இருக்கும். எலும்புகள், கொம்புகள், நகங்கள் போன்றவைகளை அரைத்து உண்ணக் கூடிய வலிமை இதன் தாடைகளுக்கு இருக்கிறது. இதன் உடல் முழுவதும் ரோமங்கள் உள்ளன. இது புலி, சிங்கம், சிறுத்தைகள் போன்ற விலங்குகள் வேட்டையாடி சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைத்த அழுகிய உடல்களை சாப்பிடும்.
இந்த கழுதை புலியின் ஜீரண மண்டலத்தில் அழுகிய உடல்களிலிருந்து உருவாகும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை எதிர்கொள்ளும் சக்தி இருக்கிறது. இதனால்தான் அழுகிய உணவுகளை சாப்பிட்டாலும் அதன் உடலுக்கு எந்த உபாதைகளும் வருவதில்லை. மனிதர்களுக்கு பெயர் இருப்பதை வைத்து அடையாளம் கொள்வதை போல் இந்த கழுதை புலிகளுக்கு whooping sound இருக்கும்.
இவை ஒவ்வொரு கழுதை புலிகளுக்கும் மாறுபடும். இதை வைத்தே இது குறிப்பிட்ட அந்த கழுதை புலி என்பதை மற்ற விலங்குகளும் அடையாளம் கொள்ளும் வகையில் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள வரிகள் கொண்ட கழுதை புலிகளுக்கு சிரிக்கும் குணம் இல்லை. ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் புள்ளிகள் கொண்ட கழுதை புலிகள் சிரிக்கும்.
அச்சத்தில் இருக்கும் போதும் பதற்றத்தில் இருக்கும் போதும் அந்த சப்தத்தை கொடுக்கும். இதை ஜிகில் சவுண்ட் என்பார்கள். இதை கேட்கும் போது மனிதன் சிரிப்பது போன்று இருக்கும். இதனால்தான் புள்ளிகள் கொண்ட கழுதை புலிகளை laughing hyenas என்பார்கள். லியோ படத்திலும் இந்த கழுதை புலிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இனவிருத்தியில் 4 முக்கிய பண்புகள் இந்த கழுதை புலிகளுக்கு உண்டு. அதில் முதல் ஒரு பெண் ஹைனா ஒரே ஆண் ஹைனாவுடன் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். அதாவது ஒருவனுக்கு ஒருத்தி! ஒரு ஆண் கழுதை புலி தனது கூட்டத்தில் இருக்கும் பெண் கழுதை புலியுடன் உறவு கொள்ளாது. வேறு கூட்டத்தில் இருக்கும் பெண்ணுடன் மட்டுமே உறவு வைக்கும். மனிதர்களில் சொந்தத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பார்கள் இதை கழுதை புலிகள் மிகவும் அழகாக பின்பற்றுகிறது எனலாம்.
மற்ற விலங்குகளில் குட்டிகளை பெண் மட்டுமே பாதுகாக்கும், வளர்த்தெடுக்கும். ஆனால் கழுதை புலிகளில் பெண்ணுடன் சேர்ந்து ஆண் கழுதை புலிகளும் அந்த கழுதை புலிகளை வளர்த்தெடுக்க ஒத்துழைப்பு கொடுக்கும். புள்ளிகள் கொண்ட கழுதை புலிகளில் மிக முக்கியமான பண்பு இருக்கிறது. அதாவது Alpha female என்பார்கள். அந்த கூட்டத்திற்கே அந்த பெண் கழுதை புலி வைத்ததுதான் சட்டம். பெண் கழுதை புலிகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் உண்டு.
இதன் கர்ப்ப காலம் 90 நாட்கள். இது ஒரே நேரத்தில் இரண்டிலிருந்து 4 நாட்கள் வரை ஈனும். அதிகபட்சம் பிறக்கும் போதே சில குட்டிகள் இறந்துவிடும். இரவு நேரத்தில் மட்டுமே இது இரை தேடும். காலை 5 மணிக்கெல்லாம் தன்னுடைய இருப்பிடத்திற்கு வந்துவிடும். இதனுடைய உணவு பழக்கம் என பார்த்தால் புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்த விலங்குகளை கழுதை புலிகள் சாப்பிடும். இதனால்தான காடுகளில் துப்புரவு பணியை கழுதை புலிகள் செய்கிறது என்று கூட சொல்லலாம்.

பழங்களை கூட கழுதை புலிகள் உண்ணும். இது சிறந்த வேட்டையாடும் உயிரினம். புள்ளிகள் கொண்ட கழுதை புலிகள்தான் அதிகம் வேட்டையாடும். இது மான்களை ஓடவிட்டு மூச்சுவாங்கவிட்டு பிறகு வேட்டையாடும். ஆனால் கழுதை புலிகளின் நுரையீரல் தன்மையால் அவை எவ்வளவு ஓடினாலும் மூச்சிரைக்காது. பெரிய விலங்குகளை கூட கூட்டமாக சேர்ந்து வேட்டையாடி சாப்பிடும் குணம் இந்த கழுதை புலிகளுக்கு இருக்கிறது.
இது நண்பர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கும். மூக்கோடு மூக்கு வைத்து கொஞ்சி மகிழும், பின்புறம் முதுகில் நாக்கால் நக்கி பாசத்தை காட்டும். கழுதை புலிகளுக்கு பழிவாங்கும் குணம் உள்ளது. நாம் அதை தொந்தரவு செய்தால் உடனே தாக்கக் கூடிய புத்திக் கூர்மை கொண்ட விலங்கு. காடுகள் சுத்தமாக இருக்க கழுதை புலிகள் தேவை. எனவே இவற்றை வனத்துறையுடன் இணைந்து பாதுகாக்க உதவுங்கள். இவ்வாறு சதீஷ் தெரிவித்துள்ளார். லியோ படத்தின் ஒரு பகுதியாக கழுதை புலிகளின் குணங்களையும் அதை பாதுகாப்பது குறித்தும் விளக்கும் விதமாக கதைக் கரு இருக்கலாம் என தெரிகிறது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications