மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம்
சென்னை: மணி பிளான்ட்டை விடவும் பல மடங்கு வேகமாக நேர்மறை அதிர்வுகளை ஈர்த்து, பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கும் வல்லமை 'கிராசுலா' எனப்படும் ஜேட் பிளான்ட் செடி பற்றி ஊரே பேச்சாக இருக்கிறது.. நவீன வாஸ்து நிபுணர்கள் மற்றும் சீனக் கலை முறையான பெங் சுயி நிபுணர்கள் தற்போது இதுகுறித்த ரகசியத்தை உடைத்துள்ளனர். அது என்ன தெரியுமா?
பொதுவாக ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு உழைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அவன் வாழும் இடத்தில் இருக்கும் நேர்மறை ஆற்றலும் முக்கியம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நம் வீடுகளில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காகப் பலரும் காலம் காலமாக வளர்த்து வரும் ஒரு செடி மணி பிளான்ட்.

மணி பிளான்ட் ரகசியம்
ஆனால், இந்த மணி பிளான்ட்டை விடவும், பவர் இருப்பதாக அவர்கள் சொல்வது இந்த கிராசுலா செடியைதான்.. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், இட நெருக்கடி காரணமாகப் பெரிய மரங்களை வளர்க்க முடியாத சூழலில், இந்தச் சிறிய கிராசுலா செடி ஒரு வரப்பிரசாதமாக மாறி வருகிறது.
இந்தக் கிராசுலா செடியின் தோற்றமே ஒரு தனித்துவமான ஈர்ப்பைக் கொண்டது. இதன் இலைகள் தடிமனாகவும், கரும்பச்சை நிறத்தில் உருண்டையாகவும், பார்ப்பதற்குச் சிறிய நாணயங்கள் அடுக்கப்பட்டது போலவும் தோற்றமளிக்கும்.
பணம், செல்வத்தை தரும் கிராசுலா
வாஸ்து ரீதியாக தடிமனான இலைகளைக் கொண்ட செடிகள் எப்போதும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. இந்தச் செடியின் இலைகள் தங்களுக்குள் நீரைச் சேமித்து வைப்பதைப் போலவே, இது வளர்க்கப்படும் வீடுகளில் செல்வத்தையும் சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டதாக நம்பப்படுகிறது.
பல வீடுகளில் எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் கையில் பணம் தங்காமல் கரைந்து போவதற்கு அங்கு நிலவும் எதிர்மறை ஆற்றல் ஒரு காரணமாக இருக்கலாம். அத்தகைய இடங்களில் இந்தக் கிராசுலா செடியை வைக்கும்போது, அது அங்குள்ள எதிர்மறை அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டு நேர்மறை ஆற்றலை வெளிவிடத் தொடங்குகிறது.
கிராசுலா செடியின் மகிமை
இந்தச் செடியை வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது அதனை சரியான திசையில் வைப்பதாகும். தவறான இடத்தில் வைக்கப்படும் எந்தவொரு வாஸ்து பொருளும் உரிய பலனைத் தராது. கிராசுலா செடியைப் பொறுத்தவரை வீட்டின் பிரதான நுழைவு வாயில்தான் பெஸ்ட் இடம்.
வீட்டிற்குள் நுழையும் போது உங்கள் வலது கை பக்கம் இருக்குமாறு இந்தச் செடியை வைக்க வேண்டும். இது பிரபஞ்சத்தில் இருக்கும் நல்ல ஆற்றல்களை உங்கள் வீட்டிற்குள் நுழைய வைக்கும் ஒரு நுழைவுச் சீட்டு போன்றது. சூரிய ஒளி நேரடியாகப் படாத இடங்களிலும் இது செழித்து வளரும் என்பதால், ஹால் அல்லது வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஓரங்களில் இதனைத் தாராளமாக வைக்கலாம்.
அதே சமயம் படுக்கையறையிலோ அல்லது கழிவறைக்கு அருகிலோ இந்தச் செடியை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.
வாஸ்து டிப்ஸ்
அலுவலகங்களில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்திப்பவர்கள், தங்கள் மேஜையின் மீது இந்தச் செடியை வைக்கலாம். இது வியாபார ரீதியான புதிய தொடர்புகளை உருவாக்குவதற்கும், வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கும் உதவும் என பெங் சுயி நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள். பராமரிப்பைப் பொறுத்தவரை இது மிகவும் எளிமையானது.
இதற்கு தினசரி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. வாரத்திற்கு இரண்டு முறை சிறிதளவு நீர் தெளித்தாலே போதுமானது. அதிக கவனிப்பு தேவையில்லை என்பதால், பிஸியாக இருக்கும் இன்றைய தலைமுறையினருக்கு இது மிகவும் உகந்த செடியாகும்.
இந்த தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில், மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்துச் சிந்திக்கும் இந்த நேரத்தில், இத்தகைய சிறிய மாற்றங்கள் பெரிய மன அமைதியைத் தரும். மணி பிளான்ட் வளர்த்தும் பெரிய மாற்றங்களைக் காணாதவர்கள், ஒருமுறை இந்த கிராசுலா செடியை வளர்த்துப் பார்க்கலாம். நம்பிக்கையுடன் செய்யப்படும் இத்தகைய மாற்றங்கள் வாழ்வில் புதிய கதவுகளைத் திறக்கும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்..!!
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications