சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 2 மணி நேரம் விசாரணை.. அடுத்தது என்ன?.. முக்கிய தகவல்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: துணை நடிகை புகாரில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க முன்னாள் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

Recommended Video

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது

    துணை நடிகையும் மலேசியா தூதரக அதிகாரியுமான சாந்தினி அ.தி.மு.க முன்னாள் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

    தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார். மேலும் 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் பகீர் புகார் கூறி இருந்தார் துணை நடிகை சாந்தினி.

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

    இதனை தொடர்ந்து மணிகண்டன் மீது மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டுகளை மணிகண்டன் மறுத்தார். ஆனால் அவருக்கும் சாந்தினிக்கும் தொடர்பு இருப்பதாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன.

    அதிரடி கைது

    அதிரடி கைது

    இதன் பின்னர் மணிகண்டன் தலைமறைவானார். இரண்டு தனிப்படைகள் அமைத்து அவரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே மணிகண்டன் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் இன்று காலை அதிரடியாக கைது செய்தனர்.

    2 மணி நேரம் விசாரணை

    2 மணி நேரம் விசாரணை

    தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெங்களுருவில் முகாமிட்டு இருந்த போலீசார் ஒரு தோட்டத்து வீட்டில் வைத்து மணிகண்டனை பொறி வைத்து தூக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து மணிகண்டனிடம் 2 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    நீதிமன்றத்தில் ஆஜர்

    நீதிமன்றத்தில் ஆஜர்

    துணை நடிகை கொடுத்த புகார் தொடர்பாக கேள்விகளை முன்வைத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதனையடுத்து மணிகண்டனை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினார்கள். மணிகண்டன் தலைமறைவாக இருக்க அவரது உதவியாளர்கள் பிரவீன், இளங்கோ ஆகியோர் உதவியதாக கூறப்படுகிறது. கைதான அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    Manikandan, a former AIADMK minister who was arrested on a complaint by a supporting actress, was questioned by police for 2 hours
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X