அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அங்கு அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் லட்சுமணனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தோல்வி அடைந்த போதிலும் ஆளும் திமுகவை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் விமர்சனம் செய்து ஆக்டிவ் அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார்
அண்மை காலமாக அதிமுகவினருடன் தொலைப்பேசியில் பேசிவரும் சசிகலாவை கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சசிகலாவிற்கு எதிராக விழுப்புரம் அதிமுகவில் தீர்மானமும் கொண்டுவந்தனர். கடந்த இரண்டு நாட்களாக சசிகலா குறித்து சி.வி.சண்முகம் பேசியதுதான் ஹாட் டாப்பிக்காக இருந்தது.
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் பெரும் செல்வாக்கு வகித்து வரும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திண்டிவனத்தில் குடியிருந்து வருகிறார். இன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வயிற்று வலி காரணமாக அங்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications