Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்! Ex.அமைச்சருக்கு தொடர்பா? வேணும்னா விசாரிச்சுக்கங்க! ஜெயக்குமார் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை : சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் மறு விசாரணை நடத்த எந்த பிரச்சினையும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பிரபல சீரியல் நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொள்ள அவரின் கணவர் மற்றும் தாய் கொடுத்த மனஅழுத்தமே காரணம் என காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகை தற்கொலை

நடிகை தற்கொலை

அடுத்தடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மதுபோதையில் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று சித்ராவுடன் பிரச்னை செய்தது அம்பலமாகியுள்ளது. அதனால், ஹேம்நாத்தை விட்டு பிரிந்து வருமாறு தாய் விஜயா சித்ராவிடம் தெரிவித்தாகவும், இருவரால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறினர். சித்ராவின் செல்ஃபோனில் இருந்த SMS, புகைப்படங்கள், ஆடியோ போன்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பலத்த சர்ச்சை

பலத்த சர்ச்சை

இந்நிலையில் அரசியலில் முக்கிய அந்தஸ்தில் உள்ள சிலருக்கு சித்ராவின் மரணத்தில் தொடர்பு உள்ளது. சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் பண பலம், அரசியல் பலம் கொண்ட மாஃபியா கும்பல் இருக்கிறது. அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தினால், என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அந்த கும்பல் மிரட்டுகிறது. என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கும் வரை நான் உயிரோடு வாழ விரும்புகிறேன். எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஹேம்நாத் போலீசில் புகார் அளித்தார்.

கணவர் புகார்

கணவர் புகார்

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல்துறை உத்தரவிட்ட நிலையில், இந்த விவகாரம் அரசியல் அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக ஹேம்நாத் உண்மையை கூறுகிறாரா அல்லது வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக இப்படி பேசுகிறாரா என பல்வேறு யூகங்கள் வெளியானது. அரசியல்வாதிகள், மாஜி அமைச்சர், மாபியா கும்பல் என அடுத்தடுத்து அவர் குற்றம் சாட்டிய நிலையில் அந்த அதிமுக முன்னாள் அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜெயக்குமார் விளக்கம்

ஜெயக்குமார் விளக்கம்

நடிகை மரணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் மறு விசாரணை நடத்த எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகை சித்ராவின் மரணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் மறு விசாரணை நடத்த எந்த பிரச்சினையும் இல்லை. மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை. உண்மை குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் " என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+