ஓபிஎஸ் கூடாரம் காலி.. அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் விஜய்யின் தவெகவில் இணைந்தார்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரான கு.ப கிருஷ்ணன் சற்று முன் தவெகவில் இணைந்துள்ளார். கடந்த 1991 முதல் 1996 வரை விவசாயத்துறை அமைச்சராக இருந்த இவர் தற்போது தவெகவில் விஜய் முன்னிலையில் இணைந்துள்ளார். ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக மாற்று கட்சியில் சேர்ந்து வரும் நிலையில் அமைச்சர், எம்.எல்.ஏ, பல்வேறு கட்சி அனுபவங்கள் கொண்ட இவர் தவெகவில் இணைந்தது கவனம் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று சென்னை மாமல்லப்புரத்தில் நடந்தது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார். தனித்து நின்றாலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என்று விஜய் பேசினார்.

தவெகவில் இணைந்த கு.ப கிருஷ்ணன்
விஜய்யின் செயல்வீரர்கள் கூட்டம் முடிந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரான கு.ப கிருஷ்ணன் தவெகவில் இணைந்தார். விஜய்யின் முன்னிலையில் சென்னை மாமல்லப்புரத்தில் கு.ப கிருஷ்ணன் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகி வரும் நிலையில் தற்போது கு ப கிருஷ்ணன் விஜய் கட்சியில் இணைந்து இருப்பது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
எந்த பெரிய கட்சிகளும் தவெகவுடன் கூட்டணி வைக்காத நிலையில், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பணியாற்றிய அனுபவம் உள்ள கு.ப கிருஷ்ணன் தவெகவில் இணைந்து இருப்பது தவெகவினருக்கு சற்று குஷியை கொடுத்துள்ளது. ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார். பின்னர் வைத்தியலிங்கம், சுப்புரத்தினம் என அடுத்தடுத்து ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்.
காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்
தேர்தலுக்கு இன்னும் சில காலங்களே உள்ள நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்ததாலும், யாருடன் கூட்டணி என்பதையும் சொல்லாமல் இருந்து வந்ததாலும் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மாற்று கட்சியில் இணைந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதேபோன்று ஓ பிஎஸ் ஆதரவாளர் தர்மரும் அதிமுக பக்கம் தாவியுள்ளார்.
ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வெளியேறியுள்ள நிலையில் அவரது கூடாரம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஓ பன்னீர் செல்வமும் அடுத்ததாக திமுகவில் இணைய உள்ளதாகவும் பரவலாக பேசப்படுகிறது. நேற்று திமுக அமைச்சர் சேகர்பாபுவுடன் ஓ பன்னீர் செல்வம் சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
யார் இந்த கு.ப கிருஷ்ணன்?
விஜய்யின் தவெகவில் இணைந்துள்ள கு.ப கிருஷ்ணன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனது அரசியல் வாழ்க்கையை முதன் முதலாக அதிமுகவில்தான் ஆரம்பித்தார். அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், ஜெயலலிதா ஆட்சியில் 1991 - 1996 வரை விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகினார்.
பின்னர் தமிழர் பூமி கட்சியை ஆரம்பித்தார். பின்னர் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இதன் பிறகு விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அவருடன் இணைந்தார். பின்னர் அங்கிருந்து விலகி ஓ பன்னீர் செல்வத்தின் அதிமுகவில் இணைந்தார். ஆனால் சமீப ஆண்டுகளாக அரசியைல் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் விஜய் கட்சியில் இணைந்து உள்ளார். இவர் மீது ரூ.3.73 கோடி ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
-
Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications