Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவரா? பயங்கரமான ஆளாச்சே! அதிமுக மாஜியை தட்டி தூக்கும் விஜய்! எடப்பாடிக்கு செக் வைக்க இப்படி ப்ளானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தற்போதிலிருந்தே தயாராகி வருகிறார். குறிப்பாக கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுகவில் முக்கிய நிர்வாகி ஒருவரை தனது கட்சிக்கு இழுக்கும் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்த நிர்வாகி யார் என்பது குறித்தான தகவல் கசிந்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தீவிர அரசியலில் குதித்து ஒரு வருடம் கடந்து விட்டது. இன்னும் ஒரு வருடத்தில் அரசியலில் முதல் பரிட்சையை எழுத தயாராகி வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் விஜய் எதிர்கொள்ளும் முதல் தேர்தல்.

Ma Foi Pandiarajan Vijay TVK

இதற்கு முன்னதாக உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றில் நேரடியாக இல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தினர் களத்தில் இறங்கி சில பகுதிகளில் வெற்றியும் பெற்றனர். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தில் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.

2026 தனித்துப் போட்டியா அல்லது கூட்டணி அமைத்து போட்டியா என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது கிடைத்திருக்கும் தகவல்படி அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேரலாம் என கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையா இல்லையா என்பது குறித்து விஜய் தரப்பு, அதிமுக தரப்பு பேசவில்லை. அதே நேரத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார். மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக, மாநகர், பேரூராட்சி, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது.

மேலும் கமிட்டி உறுப்பினர்கள் நியமனமும் தற்போது நடைபெற்று வருகிறது. கட்சியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க தனது முகம் மட்டும் போதாது என உணர்ந்துள்ள விஜய் வேறு கட்சிகளில் இருக்கும் நிர்வாகிகளையும் கட்சிக்குள் இழுக்க முயற்சித்து வருகிறார். அதன் பயனாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா, அதிமுகவிலிருந்து சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன், சில நடிகர்கள் தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளனர்.

துணை பொதுச்செயலாளர், துணை பொருளாளர், கொள்கை பரப்பு துணை செயலாளர் உள்ளிட்ட மாநில பொறுப்புகள் தருவதாக கூறி வேறு சில கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி அதிமுகவில் முக்கிய முன்னாள் அமைச்சர் ஒருவரை இழுக்க விஜய் தரப்பு பேசி வருவதாக கூறப்படுகிறது. 2009ஆம் ஆண்டு வரை நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சியில் இருந்த மாஃபா பாண்டியராஜன் தான் தற்போது விஜய் கட்சிக்கு செல்ல இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், அதற்குப் பிறகு 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் இணைந்த போது விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு பிறகு விஜயகாந்த் அதிமுக இடையே மோதல் வெடித்த நிலையில் ஒன்பது எம்எல்ஏக்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். அதற்குப் பிறகு 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர் அமைச்சராக இருந்தார்.

ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து முதன்முறையாக வெளியேற்றப்பட்ட போது அவர் பக்கம் சென்ற ஒரே அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு கட்சியை இணைத்த போது எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சென்று அவர், மீண்டும் ஓபிஎஸ் வெளியேற்றப்பட்ட போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலேயே இருந்து கொண்டார். இருந்த போதும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் என்ற முத்திரை பாண்டியராஜன் மீது இருக்கிறது. தொடர்ந்து ஆவடியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் விருதுநகர் அரசியலுக்கு செல்ல முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் அவர் அதிமுகவில் ஜெயலலிதா இருந்தபோது கிடைத்த அங்கீகாரம் தற்போது தனக்கு இல்லை என அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் தன்னை எடப்பாடி பழனிச்சாமி சேர்த்துக் கொண்டாலும், உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என அதிருப்தியில் இருக்கிறார். இதனால் விஜய் கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அது தொடர்பான அறிவிப்பும் வரலாம் என்கின்றனர் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+