அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த வேல்ராஜ்.. ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட்! என்ன காரணம்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றியவர் வேல்ராஜ். அவர் துணை வேந்தராகப் பதவிக்காலம் முடிந்த பிறகும் பேராசிரியராகத் தொடர்ந்து பணியாற்றி வந்தார். இன்றுடன் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், திடீரென அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நிதி முறைகேடு புகாரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றி வந்தவர் வேல்ராஜ். இவர் கடந்த 2021ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகள் இவர் துணைவேந்தராக இருந்த நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதத்துடன் இவரது பதவிக்காலம் நிறைவடைந்தது.

இவரது பதவிக்காலம் முடிந்த பிறகு புதிய துணை வேந்தரைத் தேர்வு செய்யத் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்னும் புதிய துணை வேந்தர் தேர்வு செய்யப்படவில்லை. இப்போது பல்கலைக்கழகத்தை நிர்வாக குழு ஒன்றே நிர்வகித்து வருகிறது.
அதேநேரம் வேல்ராஜின் துணை வேந்தர் பதவி முடிந்த போதிலும், அவர் தொடர்ந்து தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்தார். இன்று அவர் பணி ஓய்வு பெற இருந்தார். இருப்பினும், அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இயந்திரவியல் துறையில் பணியாற்றியபோது எழுந்த நிதி முறைகேடு புகார் காரணமாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் உத்தரவின் நகலை வேல்ராஜிடம் பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் வழங்கியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கடைசி நாளில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், ஓய்வூதிய பலன்கள் அவருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சஸ்பெண்ட் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகே அவருக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.
பேரிசியர் பணியில் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்ட வேல்ராஜ், மெக்கானிக்கல் பிஎச்டி துறையில் 3 படிப்புகளை அறிமுகம் செய்திருக்கிறார். முதுகலை பொறியியல் துறையில் 9 புதிய படிப்புகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக இயக்குநர், துணை இயக்குநர், துறைத் தலைவர் என 14 ஆண்டுகள் நிர்வாக பணிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications