30 சதவீதம் வட்டி தருகிறோம்.. சென்னையில் வாடிக்கையாளர்களுக்கு விபூதி அடித்த பெண் வங்கி ஊழியர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைக்கு ஒரு பணத்தை போட்டால் அடுத்த இரண்டு மாதத்தில் டபுள் ஆக கிடைக்கும் யார் ஆசை வார்த்தை கூறினாலும் அப்படியே நம்புபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் மக்கள் திருந்துவது இல்லை.. பெயருக்கு சிலுுக்கு மட்டும் பணத்தை கொடுத்து, பெரிய அளவில் பிடுங்குகிறார்கள். அப்படித்தான் வங்கியில் வேலை செய்த முன்னாள் ஊழியர், தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 30 சதவீதம் வட்டி கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்தாராம். அந்த வங்கி முன்னாள் பெண் ஊழியர் கைதாகி உள்ளார்.

பொதுவாக எந்த நிறுவனத்தாலும், ஏன் எந்த தொழில் முதலீடு செய்தாலும், பங்கு சந்தையில் முதலீடு செய்தாலும் 30 சதவீத வட்டி கிடைக்க வாய்ப்பே இல்லை.. உதாரணமாக வங்கியில் சேமிப்பு கணக்கில் பிக்சிட் டெபாசிட்டில் போட்டல் 6% - 8% (ஆண்டுக்கு) வட்டிதான் கிடைக்கும். அரசின் சேமிப்புத் திட்டங்களில் (PPF, NSC): 7% - 8.2% (ஆண்டுக்கு) வட்டி கிடைக்கும். அதேபோல் அரசின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 8.2% (ஆண்டுக்கு) வட்டி தான் கிடைக்கும்.

Former bank employee arrested in Chennai for fraud involving promises of 30 interest

தனியார்களில் சற்றே ரிஸ்க் எடுப்பதாக இருந்தால், கார்ப்பரேட் / நிறுவன எப்.டி (Corporate FDs): 8% - 9.5% (ஆண்டுக்கு - சற்றே அபாயம் இருக்கும்) வட்டி கிடைக்கும். மியூட்சுவல் பண்டில் நீண்ட காலத்தில் சராசரியாக 12% - 15% தான் கிடைக்கும். ஆனால் மியூட்சுவல் பண்டில் சந்தை அபாயம் உள்ளது. சந்தை நிலவரம் நன்றாக இருந்தால் தான் கிடைக்கும். இவை எல்லாமே ஆண்டுக்குக்கு கிடைக்கும் வருமானம்.

இவற்றை மாதக் கணக்காகப் பிரித்தால், மாதத்திற்குச் சராசரியாக 0.5% முதல் 1% வரை மட்டுமே வருமானம் கிடைக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டு தான் பல முதலீட்டாளர்களிடம் மாதம் 2 வட்டி தருகிறோம், 5 வட்டி தருகிறோம் என்று ஏமாற்றுகிறார்கள். இன்னும் சிலர் 3 மாதத்தில் டபுள் ஆகும் உங்கள் பணம் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுகிறார்கள். அப்படித்தான் முன்னாள் வங்கி ஊழியர் தன் மீதான நம்பிக்கையை வைத்து ஏமாற்றி உள்ளார்.

சென்னையைச் சேர்ந்த 40 வயதாகும் ஹேமாபிரியதர்ஷினிக்கு 2024-ம் ஆண்டு சரவணன் என்பவர் மூலம் பூஜா ஜெயின் (39) என்பவர் அறிமுகமானார். தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 30 சதவீதம் வட்டி கிடைக்கும் என்று பூஜா ஜெயின் ஆசைவார்த்தை கூறினார். அதை உண்மை என்று நம்பிய ஹேமாபிரியதர்ஷினி முதலில் ரூ.15 லட்சத்தை காசோலை மூலம் வழங்கியிருக்கிறார்.

அதற்காக சில மாதங்கள் வட்டி தொகை வந்துள்ளது. இதையடுத்து பூஜா ஜெயின் வற்புறுத்தியதால் மேலும் ரூ.8 லட்சம் வழங்கியதாக கூறப்படுகிறது. பெண் கைது அதன்பிறகு வட்டி தொகையும், முதலீடு செய்த பணமும் கிடைக்காததால் ஹேமாபிரியதர்ஷினி தனது பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். அப்போது முதலீடு செய்த நிறுவனம் நஷ்டம் அடைந்துவிட்டதாக கூறிய பூஜா ஜெயின், பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி வந்தாராம்.

இதுகுறித்த மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் ஹேமாபிரியதர்ஷினி. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார்க் டவுனைச் சேர்ந்த பூஜா ஜெயினை கைது செய்தனர். விசாரணையில், பூஜா ஜெயின், கடந்த 2019-ம் ஆண்டு முதல் தனியார் வங்கிகளில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரித்து போலி நிறுவனம் தொடங்கி, அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலி வங்கி கணக்குகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ததுடன், போலி முதலீட்டு பத்திரங்களையும் தயாரித்து கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடம் இருந்து 2 செல்போன்கள், ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பூஜா ஜெயின் மீது நுங்கம்பாக்கம், கொளத்தூர் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே மோசடி வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+