திடீரென மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவன்!
சென்னை: பாஜக முன்னாள் நிர்வாகி கே.டி ராகவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ்நாடு பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். பல ஆண்டுகளாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பாஜக சார்பாக கட்சியின் கருத்துக்களை அழுத்தமாக எடுத்து வைத்து வந்தார்.

இதன் காரணமாக தமிழ்நாடு பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக கே.டி.ராகவன் இருந்து வந்தார். இதனிடையே தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றார்.
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் கடந்த 2021ஆம் ஆண்டு ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கினார். இதில் ஏற்பட்ட சர்ச்சையில் தனது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கே.டி.ராகவன் விலகினார். அதன்பின்னர் தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்து வருகிறார். அந்த விவகாரத்திற்கு பின் எந்த அரசியல் நிகழ்ச்சியிலும் கே.டி.ராகவன் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் கே.டி.ராகவனுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது. இதை அடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் கே.டி.ராகவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்கள் ராகவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கே.டி.ராகவனுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கே.டி.ராகவனை அவரது அரசியல் நண்பர்கள் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.டி.ராகவனுக்கு உதவியாக அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் உள்ளனர். இதே மருத்துவமனை திமுக எம்பி கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications