நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் ப.சிதம்பரம் ... விட்டுக்கொடுக்காத கே.எஸ்.அழகிரி
சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் செய்வதற்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரும் உள்ளது.
வரும் 21-ம் தேதி இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் இருந்து 40 பேர் வரை நடசத்திரப் பேச்சாளர்களாக பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்பதால், திமுக, அதிமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் 40 பேர் அடங்கிய நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.

திமுக அளித்துள்ள நட்சத்திரப்பேச்சாளர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் ஜெகத்ரட்சகன், உள்ளிட்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல், அதிமுக அளித்துள்ள பட்டியலில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன.
தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் அளித்துள்ள 40 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில், கே.எஸ்.அழகிரி, முகுல் வாஸ்னிக், கே.ஆர்.ராமசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரோடு சேர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரும் உள்ளது. ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் அவர் இப்போது டெல்லி திகார் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திரப்பேச்சாளர்கள் பட்டியலில் உள்ளவர்களின் பிரச்சார செலவு வேட்பாளரை சேராது என்பதாலும், அது கட்சிக்கணக்கில் வரும் என்பதாலும் தேர்தல் நேரத்தில் நட்சத்திரப்பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். அந்த அடிப்படையில் அரசியல் கட்சிகள் இந்தப் பட்டியல்களை அளித்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications