கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல் தகனம்.. முதல்வர் ஸ்டாலின், அழகிரி பிரியாவிடை
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து அவர் உடல் கோபாலபுரத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மு.க. முத்துவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
கருணாநிதி - பத்மாவதி தம்பதியினருக்குப் பிறந்தவர் மு.க.முத்து, பல்வேறு திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். பூக்காரி, சமையல்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அரசியலில் இருந்து விலகினார். கடந்த சில ஆண்டுகளாக அவரின் உடல்நிலை மோசமாகி வந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் மு.க.முத்து உயிர் பிரிந்ததாக அவரின் மனைவி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், அவரது முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்தவர் மு.க.முத்து. திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகிய பின், அவரை போலவே உடை, நடை, பாவனைகளோடு நடித்தவர் மு.க.முத்து. தொடக்கக் காலத்தில் மு.க.முத்து நடித்த சில படங்கள் வெற்றி அடைய, அடுத்த எம்ஜிஆராக வருவார் என்று அப்போது பேசப்பட்டது.

ஆனால் மு.க.முத்து நடிப்பில் வெளியான பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு, நம்பிக்கை நட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறினார். இதன்பின் தந்தை கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகத் தனித்து வசித்து வந்தார்.
இதனிடையே மு.க.முத்துவுக்கு சிவகாம சுந்தரி என்பவருடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் பிறந்தனர். இதனிடையே கருணாநிதியுடனான மனக்கசப்பு காரணமாக அரசியலில் இருந்தும் விலகிக் கொண்டார். இதன்பின் மு.க.முத்து எங்கே இருந்தார் என்பதே பலருக்கும் தெரியாமல் போனது.
தொடர்ந்து வறுமையில் கஷ்டப்பட்ட மு.க.முத்து, திடீரென அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து தனது நிலை குறித்து கூறினார். இதன்பின் ஜெயலலிதா அவருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக மு.க.முத்து உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெற்று வந்தார்.
சென்னையில் வசித்து வந்த அவர், ஒருமுறை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மு.க.முத்து இன்று காலை 8 மணியளவில் காலமானதாக அவரின் மனைவி தெரிவித்திருக்கிறார்.
சென்னை ஈச்சம்பாக்கத்தில் மு.க.முத்துவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து முதல்வர் ஸ்டாலின் மு.க.முத்துவுக்கு அஞ்சலி செலுத்த நேரில் செல்லவுள்ளார். இதனால் திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திமுகவினரும், திரையுலகினரும் மு.க.முத்துவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கலைஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து மு.க. முத்துவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின்னர் மு.க. முத்துவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கோபாலபுரம் இல்லத்தில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானம் வரை இறூதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து மின் மயானத்தில் வைத்து மு.க. முத்து உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மு.க. முத்துவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து மு.க. முத்துவின் உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications