Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவில் உச்சபட்ச பதவிகளை வகித்த ஓபிஎஸ்! இன்று திமுகவில் சாதாரண தொண்டர்! குமுறும் well wishers

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர், துணை முதல்வர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உச்சபட்ச பதவிகளை வகித்த ஓ.பன்னீர் செல்வம் இன்று திமுகவில் சாதாரண தொண்டனாக இணைந்திருப்பது அவர்களது ஆதரவாளர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதும் நிறைய சட்ட போராட்டங்களை நடத்தியிருந்தார். ஆனால் அதில் ஒவ்வொன்றிலும் அவருக்கு பின்னடைவே ஏற்பட்டது. அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள மறுத்த எடப்பாடி பழனிசாமியிடம் பாஜகவை தூது அனுப்பி பார்த்தார்.

ops paneerselvam dmk

ஆனாலும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார். இந்த நிலையில் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வந்த அவர் திடீரென திமுகவில் இணைந்துவிட்டார்.

திமுகவில் இணைந்தது குறித்து ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்தாலும் அவர்களின் உள்ளுக்குள் ஒரு சில மனக்கசப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது அதிமுகவில் உச்சபட்ச பதவிகளை வகித்த ஓபிஎஸ், இன்று திமுகவில் சாதாரண தொண்டனாக இணைந்துள்ளாரே! அவர் முகத்தை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது என்கிறார்கள்.

எனினும் அவரது அரசியல் எதிர்காலம் அஸ்மனமாகிவிடக் கூடாது என்பதால் அவரது திமுக இணைப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்கிறார்கள். இவ்வாறு ஆதரவாளர்கள் குமுறும் அளவுக்கு ஓபிஎஸ் என்னென்ன பதவிகளை வகித்தார் என்பதை பார்க்கலாம்.

1977: பெரியகுளம் நகர 18வது வார்டு கழக மேலமைப்பு பிரதிநிதி (முதல் பதவி).
1982-84: பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர்.
1987: எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜானகி அணியில் இணைந்து, பெரியகுளம் நகரச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1993: அதிமுக ஒன்றிணைந்த பின் பெரியகுளம் நகர கழகச் செயலாளர்.
1996: பெரியகுளம் நகராட்சித் தலைவர் (உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி).
2000: தேனி மாவட்டச் செயலாளர்.

சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவிகள்

2001: போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வருவாய்த் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2006: அதிமுக தோல்வியடைந்த பின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக (Leader of Opposition) சில காலம் பதவி வகித்தார்.
2011 மற்றும் 2016: போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து மீண்டும் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015: ஜெயலலிதா விடுதலையடைந்த பின் பொதுப்பணித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2016-17: நிதி அமைச்சர் பொறுப்பு வகித்தார் (பல முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்).

3 முறை முதல்வர் பதவி

ஜெயலலிதாவின் நெருக்கடி காலங்களில் "நம்பகமான இடைக்கால முதல்வர்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல் முறை: 21 செப்டம்பர் 2001 - 2 மார்ச் 2002 (TANSI வழக்கில் ஜெயலலிதா பதவியிழந்தபோது).
இரண்டாவது முறை: 28 செப்டம்பர் 2014 - 23 மே 2015 (சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது).
மூன்றாவது முறை: 6 டிசம்பர் 2016 - 15 பிப்ரவரி 2017 (ஜெயலலிதா மறைவுக்குப் பின்).

இவை அனைத்தும் குறுகிய காலமே (மொத்தம் சுமார் 8-9 மாதங்கள்). முதல்வராக இருந்தாலும் ஜெயலலிதா இருந்த முதல்வர் அறையை ஓபிஎஸ் ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

கட்சி உயர் பதவிகள் (2017-2022)

2017 ஆகஸ்ட்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் (Coordinator) ஆனார். எடப்பாடி கே. பழனிசாமியுடன் இணைந்து கட்சியை நடத்தினார்.
21 ஆகஸ்ட் 2017 - 6 மே 2021: தமிழக துணை முதலமைச்சர் (Deputy Chief Minister) பதவி வகித்தார்.
2018: சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தலைவர் (Leader of the House) ஆனார்.

பின்னணி

ஓ.பி.எஸ். அதிமுகவில் கிளைச் செயலாளர் முதல் ஒருங்கிணைப்பாளர் வரை உயர்ந்தார். ஜெயலலிதாவின் மிக நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக இருந்தார். ஆனால் 2022-ல் எடப்பாடி பழனிசாமியுடனான மோதலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் தனித்து செயல்பட்டு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுகவில் இணைந்தார். அதிலும் "நான் தற்போது சாதாரண தொண்டனாக இணைந்துள்ளேன்" என ஓபிஎஸ் பேட்டி கொடுத்துள்ளார். பல்வேறு பதவிகளை வகித்த ஓபிஎஸ்ஸிற்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் வாய்ந்த பதவியை கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+