வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணனிடம் "கைவரிசை” காட்ட முயன்ற மர்ம கும்பல்.. ஆன்லைனில் மோசடி முயற்சி
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் மனைவியிடம், சைபர் மோசடி செய்ய முயன்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீப சில வருடங்களாகவே பல்வேறு வகையான நிதி மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆன்லைன் மூலம் பெரும்பாலான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக விழிப்புணர்வுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தாலும், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் மனைவியிடம், சைபர் மோசடி செய்ய முயன்றதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மர்ம நபர்கள், வங்கியில் இருந்து பேசுவது போல் பேசி, வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாகவும், வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டதாகவும், மறு முனையில் பேசிய நபர் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரமணன் அளித்த ஆன்லைன் மோசடி புகார் குறித்து தென் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீஸ் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவி சரோஜாவிடம் சைபர் மோசடி கும்பல் பணம் பறிக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பல் மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் சரோஜா புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications