பாஜகவுக்கு தாவும் திமுக முன்னாள் நிர்வாகி கே.எஸ். ராதாகிருஷ்ணன்.. அமித் ஷா முன்னிலையில் இணைய திட்டம்
சென்னை: திமுக முன்னாள் நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கடந்த 2022 அக்டோபர் மாதம் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தபோது, மல்லிகார்ஜூன கார்கேயும், சசிதரூரும் போட்டியிட்டனர். இதில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மல்லிகார்ஜூன கார்கே வாகை சூடினார். இந்தத் தேர்தல் முடிவு குறித்தும், மல்லிகார்ஜூன கார்கே தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தன் ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தோற்றத்தில் கார்கே படமும் இடம்பெற்றிருந்தது. கூட்டணி கட்சியான காங்கிரஸின் உட்கத்தி தேர்தல் விவகாரத்தில் இதுதான் திமுகவின் நிலைப்பாடா? எனப் பலரும் கேள்வி எழுப்பினர். அந்தப் பதிவு சர்ச்சையானதைத் தொடர்ந்து கே.எஸ்.ராதாகிருஷ்ணனே அதை நீக்கிவிட்டார். இருந்தும் அவர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், திமுக முன்னாள் நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று நடைபெறும் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் நிலையில், அவர் முன்னிலையில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்












Click it and Unblock the Notifications