குதிரை பேர வழக்கில் ஜாமீன் பெற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.. என்னென்ன கண்டிஷன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்றார் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. நாளை முதல் திருவல்லிகேணி காவல் நிலையத்தில் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கருதிய இருவரும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினர். அவர்களுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Senthil Balaji

இதையடுத்து, அவர்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தி ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், குதிரை பேர வழக்கில் தங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை என உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கிய பின்னும், தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதால், சோதனை, விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது. முன் ஜாமீன் வழங்கப்பட்டு இன்னும் சரணடையாத நிலையில் காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது என்று முன்கூட்டியே உத்தரவு வழங்க முடியாது எனக் கூறி இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி, முன்ஜாமீன் நிபந்தனையின்படி பிணைத்தொகை செலுத்துவதற்காகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து, முன்ஜாமீனுக்கான பிணைத்தொகையை செலுத்தும் நடைமுறையைச் செந்தில் பாலாஜி, மேற்கொண்டார்.

நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க செந்தில் பாலாஜி ஆஜரானதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். நாளை முதல் திருவல்லிகேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளது.
காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+