“தவெக அரசு மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும்”.. திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளில் கூட கள்ள மெளனம் காப்பதுதான் உங்கள் பதிலா? பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தால் மக்கள் மத்தியில் பிரச்சனை ஏதும் வெடிக்காது என்று நினைக்கிறீர்கள். உங்க அமைதியால் ஒரு கட்டத்தில் புரட்சி வெடிக்கும். இதை உணரவில்லை எனில் ஆபத்து உங்களுக்குதான்" எனக் கூறியுள்ளார் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான எஸ்.எஸ். சிவசங்கர், "முதலமைச்சர் என்றாலே மு.க.ஸ்டாலின் தான் நினைவுக்கு வருவதால், தன் இயலாமையை மறைக்கவே திமுக திட்டங்களின் பெயர்களை மாற்ற நினைக்கிறார் விஜய்.

Former DMK Minister Sivasankar Slams TVK

நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மற்றும் தாயுமானவர் திட்டம் ஆகிய திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. தவெகவால் எதுவும் செய்ய முடியவில்லை எனவே திமுகவின் திட்டங்களை பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கலர் மாற்றுவது, பெயர் மாற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் மக்கள் மனதில் எதிர்ப்புதான் திரும்பும்.

மின்சாரத்துறையின் பிரச்சனைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யாமல், தினமும் வாட்ஸ்அப் செய்திகளை வைத்துக்கொண்டு ஆளுங்கட்சி பேசுவது சரியல்ல. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் எழாத மின் தட்டுப்பாடு பிரச்சனை, இந்த குறுகிய காலத்தில் ஏன் ஏற்படுகிறது? மக்கள் படும் துன்பங்களுக்கு குரல் கொடுப்பது எதிர்க்கட்சியான எங்களின் கடமை.

சிடிஆர் நிர்மல்குமார் அமைச்சரவையில் இருக்கிற எல்லா அமைச்சருக்கும் அவர்தான் 'Mouthpiece'. Mouthpiece அமைச்சராக இருக்கிறார் ஆனால் அவர் துறையைப் பற்றிக் கேள்வி கேட்டால் தெரியாது. மற்றவர்களை ஏளனம் பேசுவது, நக்கல் நையாண்டி பேசுவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்." என்றார்.

மேலும் பேசிய சிவசங்கர், "இங்கே நிலைமை சரியில்லை வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் பேட்டி கொடுக்கிறார். அவர்கள் ஏன் வர வேண்டாம் என்று சொல்ல வேண்டும். இங்கே இருந்து யாராவது விஜய் அங்கு வர வேண்டுமென கேட்டிருக்க வேண்டும். அதனால் தான் அவர்கள் இப்போ வர வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

கூட்டணியில் இருக்கின்ற இடதுசாரி இயக்கங்களே விஜய் கர்நாடகம் செல்வது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் இப்போதும் அதில் உண்டா, இல்லையா? நடக்குமா நடக்காதா என்பதை சொல்லவில்லை. உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளில் கூட கள்ள மௌனம் காக்கிறது இந்த அரசாங்கம்.

இப்படி அமைதி காப்பதால் மக்களிடம் பிரச்சனை பெரிதாக வெடிக்காது என்று நினைத்துk கொண்டிருக்கிறார்கள். ஆனால் அமைதியே ஒருக்கட்டத்தில் மிகப்பெரிய புரட்சியாக வெடிக்கும். இதை உணரவில்லை என்றால் மிகப்பெரிய ஆபத்தை தான் இந்த தவெக அரசு சந்திக்கும்" எனக் கூறியுள்ளார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கர்நாடக மாநிலத்திற்கு சென்று, அம்மாநில முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே டி.கே. சிவக்குமார் தற்போதைக்கு முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். அங்கு பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், சந்திப்பினை வேறொரு சமயத்தில் வைத்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். எனினும் இதுதொடர்பாக தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+