Ku Ka Selvam: திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க. செல்வம் உடல் நலக்குறைவால் காலமானார்
சென்னை: திமுகவின் முன்னாள் எம்எல்ஏ கு.க செல்வம் உடல் நல குறைவு காரணமாக காலமானார். திமுக தலைமை நிலைய செயலாளரான கு.க செல்வம் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திமுகவில் தலைமை நிலைய அலுவலக செயலாளராக கு.க.செல்வம் இருந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நெருங்கி பழகியவர்.

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 2016ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். பின்னர் கட்சி பதவி விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த அவர், திடீரென டெல்லி சென்று அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மூலம் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார்.
அப்போது திமுகவையும் விமர்சித்து பேசி வந்தார். பின்னர், திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர் 2020-ல் பாஜகவில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார்.
பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். இருப்பினும், பாஜகவில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதனையடுத்து கு.க.செல்வம் மீண்டும் 2022ஆம் ல் திமுகவுக்கு திரும்பினார். நேரடி அரசியலில் இருந்து சில ஆண்டுகாலமாக ஒதுங்கியிருந்தார் கு. க. செல்வம். இந்த நிலையில் இன்று உடல் நலக்குறைவால் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கு.க. செல்வம் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications