பிரேமலதா விஜயகாந்த் பென்சன்.. இது சில ஜென்மங்களுக்குப் புரியாது.. திமுக முன்னாள் எம்பி பதிவு
சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரான பிரேமலதா விஜயகாந்த், தமிழக அரசிடம் கணவர் விஜயகாந்த்துக்குச் சட்டமன்ற உறுப்பினர் பென்சன் கேட்டு கடிதம் எழுதியதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஆனால் அப்படி கடிதம் எழுதினாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.. எனினும் இந்தவிவகாரம் தொடர்பாக பலரும் பிரேமலதாவை விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக முன்னாள் எம்பி புதுக்கோட்டை எம்எம் அப்துல்லா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்தார். பொதுவாக எம்எல்ஏக்களாக 10 ஆண்டுகள் இருந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் மாதம் பென்சன் வழங்கப்படும் நடைமுறை தமிழகத்தில் இருக்கிறது. எம்எல்ஏவிற்கும், அவர் மறைந்த பின்னர், அவரது மனைவிக்கும் பென்சன் வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் விஜயகாந்த்துக்கு எம்.எல்.ஏ. பென்சன் கேட்டு, பிரேமலதா கடிதம் எழுதியதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த கடிதம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் இருந்தோ அல்லது தேமுதிக தரப்பில் இருந்தோ அல்லது பிரேமலதா தரப்பில் இருந்தோ எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை.. எனினும் இணைதளங்களில் பரவும் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் அடிப்படையில் நெட்டிசன்கள் பிரேமலதாவை விமர்சித்து வருகிறார்கள்.
எனினும் பிரேமலதாவிற்கு உள்ள சொத்துக்கு அவர் இப்படி கடிதம் எழுதியிருக்க வாய்ப்பு இல்லை என்றும் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஒருபக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபக்கம் ஆதரவும் உள்ளது. பென்சன் விவகாரத்தில் பிரேமலதா விஜயகாந்திற்கு ஆதரவாக திமுக முன்னாள் எம்பி புதுக்கோட்டை எம்எம் அப்துல்லா பதிவு ஒன்றை வெளியிட்டுளளார்.
அவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மனைவி திருமதி.பிரேமலதா, கேப்டன் எம் எல் ஏ வாக இருந்ததற்காக அவரது மனைவிக்கு கிடைக்கும் பென்ஷன் தொகை ரூபாய் 15,000 கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். இதற்காக பலரும் அவரை விமர்சிப்பதை சமூக ஊடகங்களில் பரவலாக காண முடிகிறது!
நிச்சயமாக இந்தப் பணம் தேவைப்படும் நிலையில் திருமதி.பிரேமலதா அவர்கள் இல்லை. ஆனால் பணம் என்பதைத் தாண்டி "தன் கணவன் தன்னை தவிக்கவிட்டு போகவில்லை" என ஒரு மனைவியாக அவரை உணர வைப்பது நிச்சயமாக அந்த பென்ஷன் பணம் தான்!!
ஒவ்வொரு மாதமும் அந்தப் பணத்தை கையில் பெறும் போது மறைந்த தன் கணவர் தன்னுடனேயே இருக்கும் உணர்வை நிச்சயம் அது தரும்.. அதற்காகத்தான் அவர் விண்ணபித்து இருப்பாரே தவிர நிச்சயம் வெறும் பணத்திற்காக அல்ல என உறுதியாக நான் நம்புகிறேன்.

இந்த உணர்வுகளை எல்லாம் எவ்வளவு விளக்கினாலும் சில ஜென்மங்களுக்குப் புரியாது! என்னளவில் அவர் பென்ஷன் கேட்டு விண்ணப்பித்ததை மனதார வரவேற்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications