காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் காலமானார்.. காரில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பலி!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் இன்று காலமானார். இரண்டு முறை காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏவாக பணியாற்றியவர் சுந்தரம். காரில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் சுந்தரம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுந்தரம் இன்று எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இவர் 1996 - 2001 மற்றும் 2006 - 2011 ஆகிய காலகட்டங்களில் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றியவர் சுந்தரம்.

இன்று காலை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து கீழே இறங்கும்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் காலமானது காங்கிரஸ் தொண்டர்களிடையேயும் காரைக்குடி மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து காரைக்குடி தொகுதியின் வளர்ச்சிக்கு வித்திட்ட அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications