“இனி ராஜ் கவுண்டர் இல்லை.. ராஜ்குமார்”! திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக புதிய திராவிட கழகம் அறிவிப்பு
சென்னை: எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புதிய திராவிட கழகம் கட்சியின் தலைவர் எஸ்.ராஜ்குமார் அறிவித்துள்ளார். இதுவரை கே.எஸ்.ராஜ் கவுண்டர் என்று அழைக்கப்பட்டு வந்த நான், இன்று முதல் எஸ்.ராஜ்குமார் என்று அழைக்கப்படுவேன் எனவும், சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
2026 சட்ட்சபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே நிலையில் அரசியல் காட்சிகள் பம்பரமாக சுற்றி தேர்தல் வேலை செய்து வருகின்றனர். கூட்டணியில் கட்சிகளை இணைக்கும் வேலையிலும் முன்னணி கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. சட்டசபை தேர்தலில் தங்கள் அணிக்கு ஆதரவை வலுப்படுத்துவதற்காக சிறிய கட்சிகள், அமைப்புகளிடம் பேசி வருகின்றனர்.

ராஜ் கவுண்டர் - திமுக கூட்டணி
இந்நிலையில், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புதிய திராவிட கழகம் தலைவர் எஸ்.ராஜ்குமார் அறிவித்துள்ளார். மேலும், இதுவரை கே.எஸ்.ராஜ் கவுண்டர் என்று அழைக்கப்பட்டு வந்த நான், இன்று முதல் எஸ்.ராஜ்குமார் என்று அழைக்கப்படுவேன் எனவும், சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க புதிய திராவிட கழகம் கட்சி உறுதுணையாக இருக்கும். திமுக தலைமையில் 234 தொகுதிகளிலும் அறிவிக்கப்படவுள்ள வேட்பாளர்கள் வெற்றி பெற புதிய திராவிட கழக நிர்வாகிகள் அயராது பாடுபடுவோம்.
புதிய திராவிடக் கழகம்
பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் புதிய திராவிடக் கழகத்தின் சார்பாக தொகுதி வாரியாக மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களை நடத்தப் போகிறோம். கே.எஸ்.ராஜ் கவுண்டர் என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் எஸ். ராஜ்குமார் என்று மட்டுமே பெயரை பயன்படுத்த போகிறேன். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இதே பெயரில் தான் போட்டியிடப் போகிறேன்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "வரும் சட்டமன்ற தேர்தலில் மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். வேட்டுவக்கவுண்டரின் உட்பிரிவுகளான வேட்டுவக்கவுண்டர், வேட்டைக்காரர், வேட்டைக்கார கவுண்டர், பூலூவர், பூலுவக்கவுண்டர், புன்னம் வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்கார நாயக்கர், வேடர், வேட்டுவர், வில்வேடுவர், மலைவாழ் வேட்டுவர், வால்மீகி, வலையர் ஆகிய பெயர்களில் தமிழகத்தில் BC, MBC, SC, ST, DNC ஆகிய பிரிவுகளில் உள்ள அனைத்தையும் MBC-யாக வேட்டுவக் கவுண்டர் என்ற பெயரில் அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
ராஜ் கவுண்டர்
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் கட்சியின் சார்பில் வெல்லட்டும் சமூக நீதி' என்ற பெயரில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்திய புதிய திராவிட கழகம் கட்சியின் தலைவர் ராஜ் கவுண்டர். அந்த மாநாட்டில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராஜ் கவுண்டர் என பலமுறை குறிப்பிட்டுப் பேசி இருந்தார்.
சமூக நீதி பேசும் திமுகவின் எதிர்கால முகமாக அடையாளம் காட்டப்படும் உதயநிதி ஸ்டாலின், சாதியை பிரதானப்படுத்தும் ஒரு கட்சித் தலைவரின் பெயருடன் உள்ள சாதி பெயரை பல முறை குறிப்பிட்டு பேசியதும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான், ராஜ் கவுண்டர், தான் இனிமேல் ராஜ்குமார் எனக் கூறி இருக்கிறார். திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரிலேயே அவர் பெயர் மாற்றம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications