கத்தி எங்கடா.. ஜெயலலிதா பிறந்தநாளில் கேக் வெட்டாமல் தவித்த ஜெயக்குமார்.. கடைசியில் நடந்ததை பாருங்க
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை ராயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேக் வெட்ட கத்தி இல்லாததால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தவித்தார். கடைசியில் கேக் வெட்ட அவர் செய்த செயல் அனைவரையும் சிரிப்பை வரவழைத்தது.
தமிழக முதல்வராக 6 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட்டு கட்சியை வழிநடத்தி வந்தார். கடந்த 2016ம் ஆண்டு முதல்வராக அவர் செயல்பட்டு வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

2016 டிசம்பர் 5ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் காலமானார். இதையடுத்து ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவினர் அனுசரித்து வருகின்றனர்.
அதேபோல் ஜெயலலிதாவின் பிறந்தநாளையும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஜெயலலிதாவுக்கு பிறந்தநாளாகும். அவரது 76 வது பிறந்தநாளையொட்டி நேற்று அதிமுவினர் ஜெயலலிதாவின் போட்டோவுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி கொண்டாடினர். மேலும் இனிப்புகள் வழங்கினர்.
சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினர். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கினர்.
அதேபோல் சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கேக் வெட்ட தயாராக வைக்கப்பட்டு இருந்தது. ஜெயக்குமார் கேக் வெட்ட சென்றார். அவருடன் நிர்வாகிகள் இருந்தனர். ஜெயக்குமார் கேக் வெட்ட கத்தியை கேட்டார். ஆனால் கத்தி அங்கு இல்லை.
இதனால் சில வினாடிகள் கத்திக்காக அவர் காத்திருந்தார். ஆனால் கத்தி எடுத்து வரப்படவில்லை என்பதால் ஜெயக்குமார் தனது விரல்களால் கேக்கை வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இதனை பார்த்த நிர்வாகிகள் சிரித்தனர். இந்த சமயத்தில் தனது அருகே இருந்த நபரிடம், ‛‛கேக் இருக்கு.. கத்தி எங்கடா..'' எனும் வகையில் ஜெயக்குமார் கேட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications