முன்னாள் அமைச்சர் இ.ராமகிருஷ்ணன் காலமானார்!
சென்னை: முன்னாள் அமைச்சர் இ.ராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். 1989ல் திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்த இ. ராமகிருஷ்ணன் அதன்பிறகு அதிமுகவில் இணைந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இ.ராமகிருஷ்ணன். மருத்துவரான இவர் திமுகவில் செயல்பட்டு வந்தார். அச்சரப்பாக்கம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 1984ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து 1989ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அதன் பிறகு திமுகவில் இருந்து கட்சி மாறி அதிமுகவில் இணைந்த இ.ராமகிருஷ்ணன், 1991ல் அதே அச்சரப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 1991 முதல் 1995 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து, அதிமுகவில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் இ. ராமகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 76. முன்னாள் அமைச்சர் இ.ராமகிருஷ்ணன் மறைவு அப்பகுதி அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications