சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆதரவாளர்களுடன் வந்து குவிந்த செந்தில் பாலாஜி.. அறிவாலயத்தில் படபடத்த பட்டாசுகள்

செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி.. அதிர்ச்சியில் டிடிவி

    சென்னை: பட்டாசுகள் படபடக்க களை கட்டுகிறது அறிவாலயம்!!

    கடந்தசில தினங்களாகவே செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதாக தகவல்கள் உலா வந்தன. ஆனால் இதற்கு இதுவரை திமுக தரப்பும்சரி, செந்தில் பாலாஜி தரப்பும் சரி பதிலேதும் சொல்லாமலேயே இருந்து வந்தனர்.

    செந்தில் பாலாஜியை சமாதானப்படுத்த ஒரு பக்கம் முயற்சி நடப்பதாகவும், ஆனால் அதற்கு அவர் ஒத்துவரவில்லை என்றும் கூறப்பட்டது.

    நீண்ட விளக்கம்

    நீண்ட விளக்கம்

    இதனிடையே திமுக ஆ.ராசாவுடன் ஒன்றாக இணைந்து செந்தில் பாலாஜி போட்டோ இருப்பதை பார்த்ததும் முக்கால் வாசி இந்த விஷயம் உறுதியானது. நேற்று டிடிவி தினகரனின் நீண்ட விளக்க அறிக்கையை பார்த்ததும் முற்றிலும் விஷயம் தெரிந்து விட்டது.

    குவிய தொடங்கினர்

    குவிய தொடங்கினர்

    இதையடுத்து, இன்று செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதாக கூறப்பட்டது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அறிவாலயத்தில் காலை முதலே குவிய தொடங்கி விட்டனர். அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதால், இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற ஆரம்பித்தன.

    ஆதரவாளர்கள்

    ஆதரவாளர்கள்

    செந்தில் பாலாஜி தனியாக வந்து திமுகவில் இணைவதாகதான் முதலில் முடிவானது. ஆனால் அரசியல் வட்டாரமே இதனை திரும்பி பார்க்க வேண்டும் என்று நினைத்து தனது ஆதரவாளர்களையும் அறிவாலயத்துக்கு வர ஏற்பாடு செய்தார்.

    சரவெடி வெடித்தனர்

    சரவெடி வெடித்தனர்

    அதன்படி தற்போது 2 ஆயிரம் பேர் அறிவாலயத்தில் குவிந்துள்ளனர். அதோடு பட்டாசுகளை கொளுத்தவும் ஆரம்பித்துவிட்டனர். இதனால் அறிவாலயமே செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் புடைசூழ களை கட்டுவதுடன், சரவெடி வெடித்து சிதற பட்டைய கிளப்பி வருகிறது.

    English summary
    Former Minister senthil Balaji supporters burst crackers at Arivalayam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X