Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதவியை உதறிட்டு.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் செங்கோட்டையன்? விஜய் உடன் கைகோர்ப்பது உறுதி? பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நாளை மறுநாள் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்க ழகத்தில் இணைய போவதாக கடந்த சில தினங்களாகவே பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அதற்குப் பிறகு தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக வரலாற்றில் அதிக முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டவர் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளிகள் திமுக உள்ளிட்ட கட்சிகளின் இணைந்து வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராக பதவியேற்ற ஓபிஎஸ், சசிகலாவின் நெருக்கடியால் பதவி விலகினார்.

Sengottaiyan Vijay TVK

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். இதற்கிடையே ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கினார்.

அதிமுக அதிர்ச்சி

இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் ஒற்றை தலைமை கோரிக்கையுடன் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். சட்டப் போராட்டங்கள் கை கொடுக்காத நிலையில் ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

கேஏ செங்கோட்டையன்

இதற்கிடையே கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அதே கோரிக்கையை வலியுறுத்தி செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியால் சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பாஜகவும் கைவிட்ட நிலையில் செங்கோட்டையன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

தமிழக வெற்றிக் கழகம்

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் அவர் அந்த கட்சியில் ஐக்கியமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு தினங்களாகவே இது தொடர்பான தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பிலோ அல்லது செங்கோட்டையன் தரப்பிலோ இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் இருதரப்புமே அதனை மறுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

செங்கோட்டையன் ராஜினாமா

இந்த நிலையில் நாளை மறுநாள் (7ஆம் தேதி) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மற்றொரு தகவலும் தமிழக அரசியல் களத்திலும் அதிமுகவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .அதாவது செங்கோட்டையன் நாளை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி

எம்ஜிஆரால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட செங்கோட்டையன் இதுவரை 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதிமுக வரலாற்றில் அதிக முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமை செங்கோட்டையனுக்கு உண்டு. எடப்பாடி பழனிச்சாமியால் வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிமுகவில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+