திமுக ஆ. ராசாவுடன் "தினகரனின்" செந்தில் பாலாஜி.. என்ன நடக்கிறது??
செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது உறுதியா?
Recommended Video

சென்னை: புரளியா.. வதந்தியா... கற்பனையா... நம்புவதா? வேண்டாமா என்பது எதுவுமே தெரியவில்லை இந்த போட்டோவை பார்த்தால்!!
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி டிடிவி தினகரனின் வலதுகரமாக இருந்தவர். அமமுக கரூர் மாவட்ட செயலாளராகவும், மாநில அமைப்பு செயலாளராகவும் பொறுப்பில் இருக்கிறார்.
அமமுகவின் வளர்ச்சிக்காக நிறைய உழைத்தவர்... நிறைய செலவும் செய்தவர். ஜெயலலிதாவிடமே நல்ல பெயரை வாங்கி, மாவட்ட செயலாளர் பொறுப்பை ஈசியாக பெற்று கொண்டவர்.

தகுதி நீக்கம்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் இவரும் ஒருவர். அப்போதிருந்தே செந்தில்பாலாஜி அப்செட்தான். ஆனால் கொஞ்ச நாளாகவே தினகரனுடன் இவருக்கு ஒத்து வரவில்லை.

தன்னிச்சை முடிவு
அதனால் கரூர் மாவட்டத்திலேயே நடைபெற்ற அமமுக நிகழ்ச்சியில் இருந்து ஜெயலலிதா 2-ம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி வரை எதிலேயும் கலந்துகொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம், டிடிவி தினகரனே சில முடிவுகளை அவர் விருப்பப்படி எடுப்பதாலேயே இப்படி ஒதுங்கியதாக கூறப்பட்டது.

தெளிவுபடுத்தவில்லை
இந்நிலையில் கடந்த 2, 3 தினங்களாகவே செந்தில்பாலாஜி திமுவில் இணைய போவதாக தகவல்கள் பரவின. ஆனால் இது உண்மை, பொய், அல்லது புரளி என ஒரு விஷயத்தையும் செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தாமலே இருக்கிறார்.

பிடி கொடுக்கவில்லை
எனினும் இந்த தகவல் ஓரளவு உண்மை என்று அமமுகவினர் நினைத்ததால், செந்தில் பாலாஜியிடம் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். அமமுக நிர்வாகிகள் எவ்வளவோ பேசி பார்த்தும் செந்தில் பாலாஜி பிடி கொடுக்கவில்லை என்றும் கூடிய சீக்கிரம் திமுகவில் இணையபோகிறார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

அமமுக ஆதரவாளர்கள்
செந்தில்பாலாஜி மட்டும் திமுகவில் இணையாமல், கூடவே இன்னும் சில அமமுக ஆதரவாளர்களையும் தன்னோடு அழைத்து கொண்டு போவதாகவும் சொல்லப்படுகிறது.

அதிர்ந்த தினகரன்
இதனால் அமமுக தரப்பு ரொம்பவே ஷாக் உள்ளது. இந்த நேரத்தில் தான் ஒரு போட்டோ இப்போது வெளியாகி உள்ளது. அதில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவோடு ஏர்போர்ட்டிலிருந்து செந்தில் பாலாஜி வெளியே வருகிறார். இதை பார்த்ததும் தினகரன் தரப்பு இன்னும் கொதித்து போய் அதிர்ந்து கிடக்கிறது.

அதிர்ச்சி
இது எப்போது எடுத்த போட்டோ என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும், ராசாவுடன் செந்தில் பாலாஜியை சேர்த்து பார்த்ததும் அமமுக அதிர்ச்சியில் உள்ளது. இந்த போட்டோ இணையத்தில் படு வைரலாக வருகிறது.
-
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
திமுக VS அதிமுக.. சென்னையில் 12 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை?












Click it and Unblock the Notifications