மாமாவுக்காக பெரும் பட்டாளத்தையே இறக்கிய மாப்பிள்ளை! புது தெம்புடன் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை ஒரு பெரும் பட்டாளத்துடன் நேரில் சந்தித்து ஆதரவு கரம் நீட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் சிவபதி.
எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் அமைச்சர் சிவபதியும் இன்று நேற்றல்ல ஆரம்பகால அறிமுகம் முதல் ''மாமா'' ''மாப்பிள்ளை'' என ஒருவருக்குக்கு ஒருவர் உரிமையுடன் அழைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.
கடந்த 2 நாட்களாக தமிழகமெங்கும் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் நேரில் வந்து சந்தித்து ஆதரவு தெரிவிப்பதால் எடப்பாடி பழனிசாமி புது தெம்பு பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எம்ஜிஆர் இளைஞரணி
முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆர் இளைஞரணி மாநிலச் செயலாளருமான சிவபதி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு பேரணியாக சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி வீட்டை நோக்கி சிவபதி பேரணியாக சென்றது அங்கிருந்தவர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

மாமா -மாப்பிள்ளை
90 களிலேயே எடப்பாடி பழனிசாமிக்கும் சிவபதிக்கும் அறிமுகம் ஏற்பட்டதால், ஆரம்பக்காலம் முதலே ''மாமா'' ''மாப்பிள்ளை'' என இருவரும் ஒருவரை ஒருவர் உரிமையுடன் அழைத்துக் கொள்ளக் கூடியவர்கள். சிவபதி தனக்கு தான் ஆதரவாக நிற்பார் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். ஆனால் அதற்கென்று இப்படி ஒரு பெரும் பட்டாளத்தையே அணிதிரட்டி வந்து மாஸ் காட்டுவார் என்பதை எடப்பாடி பழனிசாமி சற்றும் எதிர்பார்க்கவில்லையாம்.

சிவபதியை போல்
சிவபதியை போல் இன்னும் பல எடப்பாடி ஆதரவு முக்கிய நிர்வாகிகள் கடந்த இரண்டு நாட்களாக தங்கள் ஆதரவை தெரிவிக்க படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமி மிகுந்த உற்சாகம் அடைந்திருப்பதோடு புது தெம்பும் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Recommended Video

முழு ஆதரவு
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் சிவபதி, எம்ஜிஆர் இளைஞரணி மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஏக மனதாக எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றிணைந்து செல்வதே அவருக்கு நல்லது எனவும் கூறினார். 4 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை கட்டிக்காத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இபிஎஸ் என புகழாரம் சூடினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications