அப்பா மீது மகனுக்கு என்ன மன வருத்தம்... ஜெயக்குமார் படத்தை தவிர்க்கும் ஜெயவர்தன்
சென்னை: ஜெயலலிதா பிறந்தநாள் விளம்பரத்தில் தனது அப்பாவும், அமைச்சருமான ஜெயக்குமார் படத்தை முழுவதுமாக தவிர்த்துள்ளார் முன்னாள் எம்.பி.ஜெயவர்தன்.
சென்னையை பொறுத்தவரை ஆல் இன் ஆலாக இருக்கக்கூடிய ஒரே அமைச்சர் ஜெயக்குமார். இதனால் அவரது புகைப்படத்தை எந்த அதிமுக நிர்வாகியும் தவிர்க்காமல் கொடுக்கும் விளம்பரங்களில் இணைத்துக்கொள்வர். மேலும், கட்சி தொடர்பான பஞ்சாயத்துக்களை கூட அவரிடம் கொண்டு செல்வர். இந்நிலையில் அமைச்சரின் மகன் ஜெயவர்தன் தான் கொடுக்கும் விளம்பரங்களில் தனது தந்தையின் படத்தை தவிர்த்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி சென்னை மாநகர அதிமுகவில் விவாதமே நடக்கிறது.

ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் தினசரி நாளிதழ்களில் தங்கள் தலைவியின் புகழ்பாடும் வகையில் பக்கம் பக்காம விளம்பரங்கள் கொடுத்திருந்தனர். அதில் ஜெயலலிதா படத்துடன் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அமைச்சர்கள் படம் இடம்பெற்றிருந்தது.

இதனிடையே ஜெயவர்தன் தனது தந்தை ஜெயக்குமார் படத்தை தவிர்த்திருப்பது அவர்கள் இருவருக்கும் இடையே ஏதேனும் மனவருத்தம் இருக்கிறதா எந்த சந்தேகத்தை உண்டாக்குகிறது. சென்னை மாநகர மேயர் வேட்பாளராக அமைச்சர் ஜெயக்குமார் தனது மகன் ஜெயவர்தனை முன்னிறுத்துவார் என கூறப்பட்ட நிலையில் இந்த விளம்பர விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது உயிர் உள்ளவரை ஜெயலலிதாவின் நினைவுகளுடன் உண்மையான விசுவாசியாக இருப்பேன் என அந்த விளம்பரத்தில் ஜெயவர்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிமுக தலைமைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கூட ஜெயவர்தன் பின் வரிசையில் நின்றது குறிப்பிடத்தக்கது.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications