திமுகவிலிருந்து அடுத்த விக்கெட்.. பாஜகவில் இணைந்தார் முன்னாள் எம்பி கே.பி. ராமலிங்கம்..!
பாஜகவில் இணைந்தார் கே பி ராமலிங்கம்
சென்னை: திமுக முன்னாள் எம்பி. கே.பி. ராமலிங்கம் இன்று பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.. பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கேபி ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்.
Recommended Video
முக அழகிரியின் ஆதரவாளரும், திமுகவின் முன்னாள் எம்பியுமான கே.பி. ராமலிங்கம் கடந்த ஏப்ரல் மாதம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்... கருணாநிதியின் மறைவுக்கு பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், கருணாநிதி போன்று திறமையாக கட்சியை வழிநடத்தவில்லை என்று பகிரங்கமாகவே ராமலிங்கம் குற்றஞ்சாட்டி இருந்தார்.

மேலும், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தபடியே இருந்த நிலையில், தமிழக பாஜக தலைவர்களையும் சந்தித்து பேசினார்.. இதையடுத்து கே.பி. ராமலிங்கம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.
எனினும், பாஜகவில் ராமலிங்கம் இணையாமலேயே இருந்தார்.. அதேசமயம் பாஜகவின் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.. இந்நிலையில்தான், அமித்ஷாவின் சென்னை வருகையின்போது, ராமலிங்கம் பாஜகவில் இணைவார் என்ற செய்தி கசிந்து வந்தது.. அதற்கேற்றபடி, இன்று ராமலிங்கம் பாஜகவில் இணைவார் என்பதையும் அக்கட்சி நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருந்தது.
அதன்படியே, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.பி. ராமலிங்கம் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.. ராமலிங்கத்துக்கு அடிப்படை உறுப்பினர் அட்டையை பாஜக பொறுப்பாளர் சிடி ரவி வழங்கினார்.. சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த இணைப்பு நடந்தது.
ஏற்கனவே திமுக தலைமையுடனான பிரச்சினையில் எம்எல்ஏ குகசெல்வம் பாஜகவில் இணைந்த நிலையில், ராமலிங்கத்தின் இந்த ஐக்கியம் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. திமுகவின் சீனியர்கள் அதிருப்தி காரணமாக ஒவ்வொருவராக விலகுவதும், விலகுபவர்கள் பாஜகவில் இணைவதும், பாஜகவை பலப்படுத்துகிறதோ இல்லையோ, ஆனால், திமுகவை பலவீனப்படுத்தி வருகிறது என்பதையும் மறுக்க முடியாது.
-
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications