என்னது கடனாளியா? வீட்டு வாடகையே 'இத்தனை' லட்சம் ப்ரோ! பாஜக அண்ணாமலையை கலாய்த்த காயத்ரி ரகுராம்
கடன்காரனாக இருக்கிறேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு கட்சியின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் விமசனம் தெரிவித்துள்ளார்
சென்னை: அதிமுக-பாஜக இடையேயான மோதல் போக்கு தீவிரமடைந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இன்று விளக்கமளித்த அவர், சட்டமன்ற தேர்தலில் தான் சந்தித்த இழப்புகள் குறித்து பேசினார். இதற்கு அக்கட்சியின் முன்னாள் நிர்வாக காயத்ரி ரகுராம் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக மோதல் என்பது சமீப காலங்களாக உச்சத்தை எட்டியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் இந்த தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணிதான் காரணம் என்றும், இதனால்தான் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்துள்ளதாகவும் அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே விமர்சனத்தை முன்வைதக்க தொடங்கிவிட்டனர்.
மறுபுறம் அண்ணாமலை இடைத்தேர்தல் தோல்வி குறித்து பேச தொடங்கினார். அதில், அதிமுக ஒன்று சேராததே இந்த தோல்விக்கு காரணம் என்றும், வேட்பாளரை நிற்கவைப்பதில் தொடங்கி அடுத்தடுத்து நடந்த உட்கட்சி சலசலப்புகள்தான் இந்த தோல்விக்கு காரணம் என்று கூறினார். இவ்வாறு பேசி சில நாட்கள்தான் நகர்ந்திருக்கும். அதற்குள் பாஜகவின் ஐடிவிங் நிர்வாகிகளாக இருந்த நிர்மல்குமார் உள்ளிட்ட சிலர் அதிமுகவில் இணைந்தனர். இது பாஜகவுக்கு உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியது.

அதிமுகVSபாஜக
நிர்மல் குமாருக்கு முன்னர் பல நிர்வாகிகள் பாஜகவிலிருந்து வெளியேறியுள்ளனர். ஆனால் நிர்மல் குமார் வெளியேறும் போது அண்ணாமலையை #420 என விமர்சித்திருந்தார். இப்படி இருக்கையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் நிர்மர் குமாரை கட்சிக்குள் வரவேற்று சேர்த்துக்கொண்டார். இதற்கு முன்னர் வரை ஏற்கெனவே பல சலசலப்புகள் இருந்தாலும், தற்போது நடந்த சம்பவம் இரு கட்சியின் நிர்வாகிகளின் மோதலுக்கு முக்கிய புள்ளியாக அமைந்தது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, "அதிமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டது" என்று பாஜக விமர்சிக்க தொடங்கிவிட்டது. இதனையடுத்து அண்ணாமலை பேசுகையில் ஜெலலிதாவை விட வலிமைக்க தலைவர் நான் என்று பேசி அதிமுகவை முகம் சுழிக்க வைத்தார்.

மோதல்
இதுவரை பொறுமையாக இருந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பொங்கி எழ தொடங்கினர். செல்லூர் ராஜு இதுவரை எந்த இடத்திலும் ஆவேசமாக யாரையும் திட்டியது கிடையாது. ஆனால் அவரே டென்ஷனாகி அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டார். இவரையடுத்து மேலுர் சில தலைவர்கள் பேசுகையில் மோதல் உச்ச கட்டத்தை அடைந்தது. அண்ணாமலையும், "தமிழ்நாட்டில் பாஜக வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்கக்கூடாது. அதிமுக உடன் எதிர்வரும் தேர்தலில் கூட்டணி வைக்கப்படும் என்று கட்சி தலைமை கூறினால் நான் எனது பொறுப்பை ராஜினாமா செய்துவிடுவேன் என்று கூறி பகீர் கிளப்பினார்.

கடனாளி
மேலும், திராவிட கட்சிகளுக்குள் இருந்து எந்த தேர்தலையும் சந்திக்க விரும்பவில்லை. பாஜக மாநில தலைவர் என்கிற முறையில் கூட்டணி குறித்த முடிவை நான் மேற்கொண்டு அதற்கான அறிப்பை மே மாதம் வெளியிடுவேன் எனவும் கூறியிருந்தார். இதனையடுத்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். ஆனால் என்னுடைய நிலைப்பாட்டில் நான் உறுதியாகதான் இருக்கிறனே். பணமில்லாத அரசியலை முன்னெடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாட்டில் மாற்றம் வராது" என்று கூறினார். இது சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது. இந்த பேட்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தான் போட்டியிட்டபோது எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து விளக்கினார்.

ட்வீட்
அதாவது, "காவல் அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்தேன். இதனால் தற்போது நான் கடன்காரனாக இருக்கிறேன்" என்று கூறியிருந்தார். இதற்கு பாஜகவின் முன்னாள் நிர்வாக காயத்ரி ரகுராம் விமர்சனம் தெரிவித்தள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், "காவல்துறை அதிகாரியாக அவர் சிறுக சிறுக சேர்த்த பணத்தை செலவு செய்துவிட்டதாகவும், தற்போது கடனாளியாகவும் இருப்பதாக அண்ணாமலை கூறுகிறார். ஆனால் அவர் தற்போது வசிக்கும் வீட்டின் வாடகை மட்டும் மாதம் ரூ.3.5 லட்சம். இது தவிர வார்ரூம் யூடியூபர்கள் செலவு மாதம் ரூ.8 லட்சம். இதில் ஒருதருக்கு மட்டும் மாதம் ரூ.2 லட்சம். இப்படி உச்ச ஆடம்பரத்தில் வாழும் அண்ணாமலை அருகே யாரோ வைத்துக் கொண்டு சொல்வது பணம் இல்லாத அரசியல் வேண்டும்" என்று கலாய்த்துள்ளார். இந்த ட்வீட் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications