இந்தியாவை உச்சத்திற்கு கொண்டு சென்ற மோடியை வீழ்த்த முயற்சி நடக்கிறது! செர்பியா முன்னாள் அதிபர் கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் செல்வாக்கை சர்வதேச அளவில் உயர்த்திய பிரதமர் மோடியை, வீழ்த்தவும், பலவீனப்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் நடக்கின்றன என்று செர்பியா முன்னாள் அதிபர் அலெக்சாண்டர் வுசிக் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி 25 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பை நிறைவு செய்ததை ஒட்டி அவர் பேசியது, கடந்த சில நாட்களாக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் காங்கிரஸ், கரப்பான் பூச்சி ஜனதா கட்சிகள் நாடு முழுக்க போராட்டம் நடத்தி வரும் நிலையில், மோடியை புகழ்ந்து பேசியுள்ள செர்பியா முன்னாள் அதிபரின் பேச்சு சமூக வலைத்தளத்தில் பாஜகவினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Former Serbian president Aleksandar Vucic says efforts to undermine PM Modi


மோடியை பலவீனப்படுத்த முயற்சி நடக்கிறது

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற செர்பியா முன்னாள் அதிபர் அலெக்ஸ்டானர் வுசிக், பிரதமர் மோடி குறித்து கூறியிருப்பதாவது:- "நரேந்திர மோடி போன்ற ஒரு தலைவர் இந்தியாவுக்கு இருக்கிறார். ஆனால், தற்போது அவரைப் பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி இந்தியாவை மிகப்பெரிய உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

மகாத்மா காந்தியின் போதனைகளைப் பின்பற்றவும் அவர் முயற்சி செய்கிறார். பிரதமர் மோடியின் தலைமையால் உலக அரங்கில் இந்தியா மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இந்தியா ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. மோடி மிகப்பெரிய சாதனைகளைச் செய்துள்ளார். இருப்பினும், அவர் தோல்வியடைந்துவிட்டார் அல்லது அவருக்கு எதுவும் தெரியாது என்று கூறி அவரை வீழ்த்த முயற்சிக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் தற்போது ஒரு வழக்கமாக மாறிவிட்டன" என்றார்.

பாஜக பிரமுகர்கள் வரவேற்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக போரட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுவதும் இளைஞர்கள், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், செர்பியா முன்னாள் அதிபரின் பேச்சு வைரல் ஆகி வருகிறது. பாஜக ஆதரவாளர்களும் இதனை அதிக அளவில் பரப்பி வருகிறார்கள்.

செர்பியா நாட்டு முன்னாள் அதிபரின் கருத்தை பாஜக பிரமுகர்களும் வரவேற்று பதிவிட்டு வருகிறார்கள். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருவதையும், சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதையும் உலகத் தலைவர்கள் கவனித்து வருவதாக அவர்கள் கூறியதை பார்க்க முடிந்தது.

பலமுறை பாராட்டி பேச்சு

பிரதமர் மோடியை வீழ்த்த முயற்சிகள் நடப்பதாக வுசிக் கூறினாலும், இந்த முயற்சிகளுக்கு பின்னால் யார் இருக்கிறார் என்பது பற்றி அவர் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. செர்பியா முன்னாள் அதிபர் அலெக்சாண்டர், பிரதமர் மோடியையும் இந்தியாவுடனான உறவு பற்றியும் ஏற்கனவே பலமுறை பாராட்டி பேசியுள்ளார்.

செர்பியாவில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட ஏதுவாக செர்பியா அதிபர் பதவியில் இருந்து அலெக்சாண்டர் வுசிக் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செர்பியாவில் அவருக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், உலக அளவில் தலைவர்களின் செல்வாக்கைக் குறைத்து, அவர்களைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் அதிகரித்து வருவதாக பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிலும் பிரதமர் மோடியை குறிப்பிட்டு, செர்பியா அதிபர் பேசியிருப்பது தற்போதைய சூழலில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+