திடீர் நெஞ்சுவலி.. முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை சொந்த ஜாமினில் விடுவித்தது திருப்போரூர் நீதிமன்றம்!
சென்னை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் இன்று காலையில் கைது செய்யப்பட்டார். பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் கேளம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜேஸ் தாஸை கைது செய்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது ராஜேஷ் தாஸுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

தையூரில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கிவிட்டு அத்துமீறி நுழைய முயன்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது செய்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தையூரில் உள்ள பங்களாவில் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து மிரட்டிச் சென்றதாக ராஜேஸ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் புகார் அளித்தார். விவாகரத்து வழக்கு விசாரணைக்கு இடையே பீலா வெங்கடேசன் வீட்டிற்கு சென்று ராஜேஷ் தாஸ் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பான வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தண்டனை உறுதி செய்தது.
இதனையடுத்து ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட் கைதுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கிடையே அவரது மனைவி பீலா விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளார். பீலா ராஜேஷ் என்ற பெயரில் இருந்து ராஜேஷ் என்ற பெயரை நீக்கி, தனது தந்தை பெயரை பின்னொட்டாகச் சேர்த்து பீலா வெங்கடேசன் என்று மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் ஆஜர்: இந்நிலையில், இன்று கேளம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட ராஜேஷ் தாஸை 4 மணி நேரத்திற்கும் மேல் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பை தாராததால் அரசு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியதாக கூறி அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுக்கும் சட்டப்பிரிவு 353 கீழ் ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, திருப்போரூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உள்ளே செல்லும்போது இயல்பாக இருந்தார் ராஜேஷ் தாஸ்.
திடீர் நெஞ்சு வலி: சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், வியர்த்த நிலையில் அவரை அழைத்து வந்த வாகனத்திலேயே தண்ணீர் கொடுத்து அமர வைத்து உள்ளனர். இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார் ராஜேஷ் தாஸ்.
தனக்கு மிகவும் உடல் சோர்வாக உள்ளதாக ராஜேஷ் தாஸ் கூறிய நிலையில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். சொந்த ஜாமீனில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை விடுவித்துள்ளது திருப்போரூர் நீதிமன்றம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications