திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது.. அமைந்தகரையில் வைத்து கைது செய்த சிசிபி! குவிந்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் தான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அங்கு தொடர்ந்து திமுகவினர் குவிந்து வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Anbil Mahesh Poiyamozhi Arrested

சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திமுக பிரமுகரும், தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகியுமான பி.டி. அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தர உயர்வு, கூடுதல் வகுப்பறைகள் அமைக்க அனுமதி, கட்டிடத் திட்ட ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

பிடி அரசகுமார்

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் திமுக செய்தித் தொடர்புக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரான பி.டி. அரசகுமார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பள்ளி அங்கீகார மோசடி

பிடி அரசகுமார் மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 3 பேருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் அரச குமாரிடமும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளரான வாளாடி கார்த்திக் ஆகியோருக்கு சொந்தமான 8 இடங்களில் 20க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சிக்கிய ஆவணங்கள்

சுமார் 8 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் வங்கி பரிவர்த்தனைகள், பள்ளி அங்கீகாரம் தொடர்பான ஆவணங்கள், மனுக்கள், ஹார்ட் டிஸ்க்கள், காசோலைகள், லேப்டாப்கள், 18 செல்போன்கள், ஒரு ஐபாட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக குற்றப்பிரிவு போலீசார் கூறியிருந்தனர். இந்த நிலையில் 8 மணி நேர சோதனையின் அடிப்படையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பினர்.

முன் ஜாமீன் தள்ளுபடி

இந்நிலையில், மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில், இன்று முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அன்பில் மகேஷ் கைது

இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை அமைந்தகரையில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் ஏராளமான திமுகவினர் அங்கு குவியத் தொடங்குவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+